அமெரிக்காவில் சிறார் பாலுறவு படங்களை வைத்திருந்ததாக இந்தியர் மீது வழக்கு..!!
பொதுவாக, இணையதளங்களுக்கான தேடல்களில் ஆண்-பெண் அந்தரங்க காட்சிகளை வெளியிடும் ஆபாச வலைத்தளங்களில் உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் அதிக நேரத்தை செலவிடுவதாக சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
அதிலும் குறிப்பாக, சிறுவர்-சிறுமியர் தொடர்புடைய ஆபாச வலைத்தளங்களுக்கு (child pornography) உலகில் பல நாடுகள் தடை விதிக்கப்பட்டிருப்பதால் இதுபோன்ற வலைத்தளங்களுக்கு அதிக கிராக்கியும், மவுசும் உண்டு. மேற்படி காட்சிகளை இணையத்தில் பதிவேற்றம் செய்து அவற்றை பார்க்கவரும் ‘ரசிகர்களிடம்’ ஏராளமான கட்டணம் சந்தாவாக வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் வசித்துவரும் முகேஷ் கவாஸ் என்பவரை 12 வயதுக்கும் குறைவான சிறுவர்-சிறுமியர் பாலியல் உறவில் ஈடுபடுவதுபோன்ற படங்களை வைத்திருந்த குற்றத்துக்காக கைது செய்த போலீசார், இங்குள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
மூன்று கிரிமினல் குற்றச்சாட்டுகளின்கீழ் முகேஷ் மீது பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில் அவருக்கு 7,65,000 டாலர் அபராதத்துடன் அதிகபட்சமாக 20 ஆண்டுகள்வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என இவ்வழக்கில் ஆஜராகும் அரசு வக்கீல் டேவிட் ஹிக்டன் தெரிவித்துள்ளார்.
Average Rating