டெஸ்ட் போட்டியில் 650 விக்கெட் கைப்பற்றி முரளீதரன் சாதனை

Read Time:1 Minute, 30 Second

Murali&Wife.1jpg.jpegஉலகின் தலை பிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் முரளீதரன். இலங்கையை சேர்ந்த அவர் பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதி ராக நேற்று தொடங்கிய 2- வது டெஸ்டில் முரளீதரனின் பந்து வீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. அவர் 128 ரன் கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார்.

இதன் மூலம் டெஸ்டில் அவர் 650 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 108-வது டெஸ்டில் இந்த விக்கெட்டை எடுத்த 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றார். ஆஸ்திரேலிய சுழற் பந்து வீச்சாளர் வார்னே 140 டெஸ்டில் 685 விக்கெட் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். குறைந்த டெஸ்டில் 650 விக்கெட் கைப்பற்றியவர் என்ற சாதனையை முரளீதரன் பெற்றார்.

மேலும் 5 விக்கெட்டை அதிகமுறை எடுத்தவர் என்ற சாதனையையும் அவர் பெற்றார். 55-வது முறையாக 5 விக்கெட்டை எடுத்து உள்ளார். 51 ரன் கொடுத்து 9 விக்கெட் கைப்பற்றியது அவரது சிறந்த பந்து வீச்சு ஆகும்.

Murali&Wife.1jpg.jpeg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மூதூர் நகரில் சண்டை நீடிக்கிறது இதுவரை 161 பேர் பலி
Next post புலிகள், ராணுவம் சண்டை நிறுத்தத்துக்கு தயார்