ஒலிம்பிக்கில் வரலாற்று சாதனை படைக்க காத்திருக்கும் உசைன் போல்ட்..!!

Read Time:1 Minute, 46 Second

160815023428_usain_bolt_rio_olympic_624x351_afpஒலிம்பிக் போட்டியில் மூன்று முறை தொடர்ந்து 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் வென்றிருக்கும் உசைன் போல்ட், இந்த சாதனையை படைத்திருக்கும் முதலாவது நபர் என்ற பெருமை பெற்றிருக்கிறார்.

ரியோவில் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் மத்தியில் ஜமேக்கா தடகள வீரரான உசைன் போல்ட் 9.81 வினாடிகளில் ஓடி, தன்னுடைய முக்கிய போட்டியாளரான அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லினை விட முன்னிலை பெற்றார்.

இந்த வெற்றியானது, ஒலிம்பிக்கில் ”மூன்று – மூன்று” அதாவது 100 மீட்டர், 200 மீட்டர், 100 மீட்டர் தொடர் ஓட்டம் என மூன்று போட்டிகளில் மூன்று முறை தொடர்ச்சியாக தங்கப்பதக்கம் வெல்லும் வரலாற்று சாதனைக்கு நெருக்கமாக அவரை கொண்டுவந்துள்ளது.

முன்னதாக ஒட தொடங்கி தகுதி இழந்து 2011 ஆம் ஆண்டு உலக சாம்பியன் போட்டிகளை தவிர்த்து, கடந்த எட்டு ஆண்டுகளில் நடைபெற்ற முக்கிய தனிநபர் ஓட்டப்போட்டிகள் அனைத்திலும் போல்ட் வெற்றிபெற்றிருக்கிறார்.

“என்றுமே பெயர் அழியாத புகழோடு ஓய்வுபெற இன்னும் இரண்டு தங்கப்பதக்கங்களை வெல்ல வேண்டியுள்ளது” என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 3 வருடங்களுக்கு முன் இறந்த யானையின் உடலை தோண்டி எடுக்க முயற்சி..!!
Next post அமெரிக்காவில் விமான விபத்தில் 6 பேர் பலி..!!