பிஸ்கட், பணம் கொடுத்து 7வயது சிறுவன் 18வயது இளைஞனால் பாலியல் துஷ்பிரயோகம்…!!

Read Time:3 Minute, 7 Second

3-year-old-boy-rape-muslimsமட்டக்களப்பு காத்தான்குடி, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறுவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞர் ஒருவரை காத்தான்குடி பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

கிரான்குளம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் பூவரசந்தெருவிலுள்ள 7 வயது சிறுவன் ஒருவன் நேற்று மாலை கோவிலுக்குச் சென்று கொண்டிருந்த போது அப்பிரதேசத்திலுள்ள 18 வயதுடைய இளைஞர் ஒருவர் குறித்த சிறுவனை காட்டுப்பகுதியொன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இதையடுத்து, வீடு வந்த சிறுவன் அம்மாவிடத்தில் விடயத்தை தெரிவித்ததையடுத்து சிறுவனை அழைத்துக் கொண்டு சிறுவனின் அம்மா காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்துள்ளார்.

இதையடுத்து காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.பி.வெதகெதரவின் ஆலோசனையிலும் வழிகாட்டலிலும் துரிதமாக விசாரணை செய்த பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.நிசாந்த தலைமையிலான பொலிஸ் குழு குறித்த சந்தேக நபரை இன்று கைது செய்துள்ளனர்.

குறித்த சிறுவன் மட்டக்களப்பு போதான வைத்தியசாலையில் சிகிச்கைச்கென அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுவனுக்கு 25 ரூபா பணமும் ஒரு பிஸ்கட் பக்கட்டும் வழங்கி அந்த சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும், இது தொடர்பான விசாரணை இடம் பெற்றுவருவதாகவும் காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரான்ஸ் கடற்படை கப்பல் இலங்கை வருகை…!!
Next post பம்பலப்பிட்டி கடலில் சடலமொன்று மிதப்பு…!!