நாமலின் வழக்கு தொடர்பில் இரு பெண்களுக்கு விளக்கமறியல்…!!

Read Time:3 Minute, 4 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90சுஜானி போகொல்லாகம மற்றும் நித்யா சேனானி ஆகியோருக்கு எதிர்வரும் ஓகஸ்ட் 22ம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

கவனர்ஸ் நிறுவனம் மற்றும் என்.ஆர். கன்சல்டன் ஆகிய நிறுவனங்கள் தொடர்பில், நாமல் ராஜபக்‌ச மேற்கொண்ட கொடுக்கல் வாங்கல் காரணமாக, அரசாங்கத்திற்கு ரூபா 45 மில்லியன் நஷ்டத்தை ஏற்படுத்தியமை தொடர்பிலேயே அவர்களை நேற்று நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

சுஜானி போகொல்லாகம மற்றும் நித்யா சேனானி ஆகியோருக்கே , கொழும்பு அளுத்கடை நீதிமன்றினால் இவ்வாறு அழைப்பாணை விடுவிக்கப்பட்டிருந்தது.

குறித்த இருவரும், குறிப்பிட்ட இரு நிறுவனங்களினதும் பணிப்பாளர்களாக செயற்பட்டவர்கள் என்பதோடு, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவின் மகளான சுஜானி போகொல்லாகம நேற்று நீதிமன்றிற்கு ஆஜராகியிருக்கவில்லை என்பதோடு, தான் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக தனது வழக்கறிஞர் மூலம் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் நீதிமன்றில் ஆஜரான நித்யாவை எதிர்வரும் ஓகஸ்ட் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் திருமதி லங்கா ஜயரத்ன உத்தரவிட்டார்.

லண்டன், எபர்டீன் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற சுஜானி போகொல்லாகம, திறைசேரியின் ஆலோசக தரத்திலான பதவியில் இருந்தார் என்பதோடு, பொலிஸ் நிதி மோசடி பிரிவினருக்கு வழங்கிய வாக்குமூலத்தில், குறித்த பதவியை தனது தந்தையான முன்னாள் வெளிவிவகார அமைச்சரின் உதவியுடன் அப்பதவியை பெற்றுக்கொண்டதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அவர் கிறிஸ் நிறுவனத்தின் சட்டத்தரணியாகவும் செயற்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காட்டு யானையிடம் மாட்டிக்கொண்ட குடும்பம்! காப்பாற்றிய இளைஞர்கள்..!!
Next post பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடு திரும்புகின்றார்…!!