கள்ளக்காதலை கைவிட மறுத்த தொழில் அதிபர் கொலை: மனைவி கைது..!!

Read Time:3 Minute, 41 Second

201608170801474066_Industrialist-murder-Wife-Arrested-near-mannady_SECVPFசென்னை பிராட்வே மண்ணடி கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் அக்பர் (வயது 54). இரும்பு வியாபாரி. இவருடைய மனைவி பாத்திமுத்து (48). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

நேற்று காலை வீட்டின் படுக்கையறையில் தொழில் அதிபர் அக்பர் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த வடக்கு கடற்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அக்பர் பிணமாக இருந்த அறையில் சோதனை மேற்கொண்டனர். மோப்ப நாய் சோனா வரவழைக்கப்பட்டது. அது வீட்டிலிருந்து தெரு வரை ஓடி சென்று நின்றுவிட்டது.

அக்பர் கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பாத்திமுத்து முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தார். இதனால் அவரிடம் போலீசார் துருவித் துருவி விசாரணை மேற்கொண்டனர். அப்போது கணவரை கொலை செய்ததை பாத்திமுத்து ஒப்புக்கொண்டார்.

போலீசார் விசாரணையில் கிடைத்த தகவல் வருமாறு:-

அக்பருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. கள்ளக்காதலை கைவிடக்கோரி பாத்திமுத்து பலமுறை கெஞ்சியும் அக்பர் மறுத்து விட்டார். சில வாரங்களுக்கு முன்பு கள்ளக்காதலியுடன் இருந்த அக்பரை, பாத்திமுத்து கையும், களவுமாக பிடித்து எச்சரித்தார்.

நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வந்த அக்பரிடம், பாத்திமுத்து கள்ளக்காதலை கைவிட கூறியபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அக்பர், பாத்திமுத்துவை தாக்கியதுடன், கள்ளக்காதலியை திருமணம் செய்து கொண்டு சென்றுவிடுவேன் என மிரட்டி உள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பாத்திமுத்து, அக்பர் தூங்கியவுடன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து கணவரின் கழுத்தை அறுத்தார். அவர் இறந்ததை உறுதி செய்த பிறகு தன்னுடைய அறைக்கு சென்று தூங்கினார். காலையில் எழுந்த உடன் கணவனை யாரோ கொலை செய்து விட்டார்கள் என நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து பாத்திமுத்து மீது போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். கள்ளக்காதலை கைவிட மறுத்த கணவனை, மனைவியே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொடுங்கையூரில் வீட்டில் தீ விபத்து: நகை, பணம் நாசம்…!!
Next post பெண்களின் பாதங்களில் காம உணர்ச்சியை கணிக்கலாம்…!!