அழகுக்கு அழகு சேர்க்கும் தக்காளி…!!

Read Time:2 Minute, 56 Second

tomato_002.w540பொதுவாக தக்காளி அனைத்து வீடுகளிலும் சமையலறையில் பயன்படுத்தும் பொருள். பெண்களின் அழகை கூட்டுவதில் தக்காளி முக்கிய பங்கு வகிக்கின்றது. பெண்கள் தங்களை அழகுப் படுத்திக் கொள்ள பியூட்டி பார்லருக்கு செல்வதை விட வீட்டில் இருக்கும் சில எளிய பொருட்களை வைத்து நம்மை அழகுப்படுத்தி கொள்ளலாம்.

* தக்காளியை தோல் மற்றும் விதைகள் நீக்கி கூழாக்குங்கள். ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை முகத்தில் தடவுங்கள். அதன் மேல் இந்த கூழைத் தடவி பத்து நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் இருமுறை இவ்வாறு செய்தால் ஒட்டிய கன்னங்கள் பூசினாற் போல் ஆகிவிடும்.

* ஒரு சிலருக்கு முகத்தில் எப்போதும் எண்ணெய் வடிந்தபடி இருக்கும் மேக்கப் போட்டாலும் தங்காது. இவர்கள் தக்காளி பழத்தை நன்கு அரைத்து, அந்த விழுதை முகத்தில் போட்டு அரை மணி நேரம் கழித்து கழிவினால் முகம் பளபளப்பாகும். எண்ணெய் வடிதலை கட்டுப்படுத்தும்.

* தக்காளி விழுது, பாதாம் விழுது தலா அரை தேக்கரண்டி எடுத்து கலந்து முகத்தில் தடவுங்கள். ஒருநாள் விட்டு ஒருநாள் இதைச் செய்தால் முகத்தில் தோன்றும் சுருக்கங்கள் மறையும்.

* உருளைக்கிழங்கு துருவல் சாறு 1 தேக்கரண்டி, தக்காளி விழுது அரை தேக்கரண்டி இரண்டையும் கலந்து முகத்தில் தேய்த்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து தக தகவென்று மின்னும்.

* சருமம் மிருதுத்தன்மையை இழந்து விட்டதா? தக்களி விழுதுடன் சிறிது தயிர் கலந்து முகத்தில் பூசுங்கள்.

* தக்காளிச் சாறுடன் சிறிது ரவையைக் கலந்து முகத்தில் தேய்த்துக் கழுவினால் முகம் பிரகாசிக்கும். இதுதான் இயற்கை ஸ்கரப்பாக உபயோகிக்கலாம்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 82வயது வயோதிப பெண் பாலியல் துஷ்பிரயோகம் ; பொலிஸார் வலைவீச்சு…!!
Next post பிரிட்டன்: மருத்துவமனை சுவரிலிருந்து தேன் கசிந்த வினோதம்…!!