5,500 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யப்போவதாக சிஸ்கோ நிறுவனம் அறிவிப்பு…!!

Read Time:1 Minute, 50 Second

140301054104_cn_cisco_logo_640x360_reutersஅமெரிக்காவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான சிஸ்கோ சிஸ்டம்ஸ் உலகளவில் அந்த நிறுவனத்தில் பணி செய்துவரும் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க திட்டமிட்டிருப்பதாக அறிவித்துள்ளது.

கணினி வன்பொருள்கள் தயாரிப்பிலிருந்து மென்பொருள் தயாரிப்புக்கு அதன் கவனம் திரும்புவதே இதற்கு காரணம்.

சுமார் 5,500 ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்பட உள்ளதாகவும், இந்த நடைமுறை உடனடியாக தொடங்கப்பட உள்ளதாகவும் அந்நிறுவனத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.
உலகளவில் அந்த நிறுவனம் 70 ஆயிரம் பேரை பணி அமர்த்தியுள்ளது.
சிஸ்கோ நிறுவனமானது கணினி சுவிட்ச்கள் மற்றும் ரூட்டர்கள் உள்ளிட்ட கருவிகளை பாரம்பரியமாக செய்து வருகிறது.

ஆனால், தற்போது வேகமாக வளர்ச்சி கண்டு வரும் பாதுகாப்பு மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பம் மீது கவனம் செலுத்த அந்நிறுவனம் விரும்புகிறது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரிட்டன்: மருத்துவமனை சுவரிலிருந்து தேன் கசிந்த வினோதம்…!!
Next post கலிபோர்னியா: காட்டுத்தீயினை அணைக்க நடக்கும் போராட்டம் தொடர்கிறது…!!