இலங்கை மோப்ப நாய்க்கு சர்வதேச விருது..!!

Read Time:2 Minute, 12 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (3)இலங்கை மோப்ப நாய்க்கு சர்வதேச விருது ஒன்று வழங்கப்படவுள்ளது.

உலகில் போர் இடம்பெற்ற, இடம்பெற்று வரும் நாடுகளில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்காக கடமையில் ஈடுபடுத்தப்பட்ட ஆயிரம் மோப்ப நாய்களில், இலங்கை இராணுவத்திற்கு சொந்தமான அல்வின் மெஜிஸ்டின் என்ற மோப்ப நாய் கூடுதல் கண்ணி வெடிகளை மீட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் அமெரிக்காவில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் இலங்கையைச் சேர்ந்த அல்வின் மெஜிஸ்டின் நாய்க்கு விசேட விருது வழங்கப்படவுள்ளது.

புதைக்கப்பட்ட நிலக்கண்ணி வெடிகளை மீட்பது தொடர்பில் ஏற்கனவே இலங்கையின் மற்றுமொரு மோப்ப நாயான கய்ரோ ஸ்பாடகெஸுக்கும் சர்வதேச விருது வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த மோப்பா நாய் சில ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்தது.2016ம் ஆண்டில் உலகின் பல நாடுகளில் போரின் போது புதைக்கப்பட்ட நிலக்கண்ணி வெடிகளை அதிகளவில் அகற்றிய அல்வின் மோப்பநாய் பெல்ஜியத்தில் பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதில் அல்வின் மிகச் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தியுள்ளது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முட்டை சாப்பிட்டால் நீரிழிவு நோய் ஏற்படுவதை தடுக்கலாம் : ஆய்வு முடிவு..!!
Next post அமைப்பாளர் பதவியை இழந்தவர்கள் கட்சி உறுப்புரிமையையும் இழக்கும் அபாயம்…!!