சூர்யா ஜோதிகா செப். 11ல் திருமணம்!

Read Time:4 Minute, 35 Second

Sooriya-Yothika.jpgநடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா திருமணம் செப்டம்பர் 11ம் தேதி நடைபெறும். 12ம்தேதி சென்னையில் திருமண வரவேற்பு நடைபெறும் என சூர்யாவின் தந்தையும், பிரபல நடிகருமான சிவக்குமார் அறிவித்துள்ளார். சரவணன் என்ற இயற்பெயர் கொண்ட சிவக்குமாரின் மூத்த மகன் சூர்யா, நேருக்கு நேர் படம் மூலம் அறி¬கமானார். வாலி படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தார் ஜோதிகா. இருவரும் இணைந்து நடித்த முதல் படம் பூவெல்லாம் கேட்டுப்பார். இந்தப் படத்தின் போது தான் இருவருக்கும் காதல் பிறந்தது.

தொடர்ந்து உயிரிலே கலந்தது, பேரழகன், காக்க காக்க, மாயாவி ஆகிய படங்களில் சேர்ந்து நடித்தனர். விரைவில் வரவுள்ள சில்லுன்னு ஒரு காதல் படத்திலும் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட காதல் ஜோடி சூர்யாஜோதிகா. ரொம்ப காலத்திற்கு இவர்களது காதல் படுமுக¬க்கமாக வளர்ந்து வந்தது. ஆனால் இது குறித்த செய்திகள் கசியத் தொடங்கிய போது இருவரும் அதை மறுக்கவும் இல்லை, ஆமாம் என்று ஆமோதிக்கவும் இல்லை.

இவர்களது காதலுக்கு சிவக்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்பட்டது. இருப்பினும் சூர்யாவும், ஜோதிகாவும் தங்களது காதலில் படு உறுதியாக இருந்து வந்ததால், ஒரு வழியாக இறங்கி வந்தார் சிவக்குமார். இதையடுத்து இவர்களது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார் சிவக்குமார்.

இதைத் தொடர்ந்து தற்போது கல்யாண தேதியை சிவக்குமாரே அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களை சந்தித்து அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில், வருகிற செப்டம்பர் 11ம் தேதி எங்களது மூத்த மகன் சூர்யாவுக்கும், மும்பையைச் சேர்ந்த சந்தர்சதானா தம்பதியினரின் மகள் ஜோதிகாவுக்கும் திருமணம் நடத்திட முடிவு செய்துள்ளோம். 12ம் தேதி மாலை ராஜா அண்ணாமலை புரம் மேயர் ராமநாதன் அரங்கில், வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளார் சிவக்குமார்.

திருமணம் நடைபெறும் இடத்தை சிவக்குமார் தெரிவிக்கவில்லை. அதை ரகசியமாக வைத்துள்ளார் அவர். திருமணத்திற்கு மிக மிக நெருங்கியவர்களை மட்டுமே அழைக்கவுள்ளதாக தெரிகிறது.

திருமணத்திற்குப் பின்னர் ஜோதிகா நடிக்க மாட்டார் என்று தெரிகிறது. சூர்யாவுடன் ஜோதிகா நடித்து வரும் சில்லுன்னு ஒருகாதல் படம்தான் அவரின் கடைசிப் படமாக இருககும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது திருமண அழைப்பிதழ்களை அனுப்பும் வேலையில் சிவக்குமார் மும்முரமாக இறங்கியுள்ளார். முதல்வர் கருணாநிதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட¬க்கியத் தலைவர்களை நேரில் சந்தித்து திருமணத்திற்கு அவர் அழைக்கவுள்ளார்.

அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யா, ஜோதிகா ஜோடி வாழ்க்கையில் ஒன்று சேர இயக்குநர் பாலா மிகவும் உதவியாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்தான் சிவக்குமாரிடம் கடுமையாகப் போராடி சமாதானப்படுத்தி தனது அன்புத் ‘தம்பி’ சூர்யாவின் கனவை நினவாக்கியிருக்கிறார் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

கங்க்ராட்ஸ் ஜோ, சூர்யா!

Sooriya-Yothika.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மூதூரில் இருந்து விடுதலைப்புலிகள் வெளியேறினார்கள்
Next post கொலம்பியாவில் கார் குண்டு தாக்குதலில் 8 பேர் சாவு