சீனாவில் உலகின் மிக உயரமான, நீளமான கண்ணாடி பாலம் திறப்பு…!!

Read Time:2 Minute, 1 Second

201608210115080943_China-Opens-Worlds-Highest-And-Longest-Glass-Bridge_SECVPFசீனாவின் ஹூனன் மாகாணத்தில் உலகின் மிக உயரமான, நீளமான கண்ணாடி பாலம் நேற்று(சனிக்கிழமை) திறக்கப்பட்டுள்ளது.

சுமார் 1,410 அடி(430 மீட்டர்) நீளத்தில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. ஹூனன் மாகாணத்தில் உள்ள ஜங்ஜியஜியி கேன்யான் என்ற பகுதியில் தரையில் இருந்து 300 அடி உயரத்தில் இந்த பாலம் உள்ளது.

இந்த பாலம் தியான்மென் மலையின் தேசிய பூங்காவில் உள்ள இரண்டு குன்றுகளுக்கு இடையில் அமைக்கப்பட்டுள்ளது.

3.4 மில்லியன் டாலர் செலவில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. 6 மீட்டர் அகலத்தில் பாலத்தின் நடுவே பாதை உள்ளது. இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஹாய்ம் டோடன் என்ற வடிவமைப்பாளர் இதனை வடிவமைத்துள்ளார்.

இந்த பாலத்தை கண்டுகளிக்க தினந்தோறும் 8 ஆயிரம் பார்வையாளர்கள் தினமும் அனுமதிக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஜூன் மாதத்தில் இந்த கண்ணாடி பாலத்தில் பல்வேறு பாதுகாப்பு சோதனை செய்யப்பட்டு தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமணம் ஆன அனைத்து பெண்களும் இந்த வீடியோ ஒருமுறை பாருங்கள்…!! வீடியோ
Next post சிரியாவின் அலெப்போ நகரில் தொடர் தாக்குதல்: 3 வாரத்தில் பொதுமக்கள் 300 பேர் பலி…!!