இரவு நேரத்தில் நொறுக்கு தீனி சாப்பிடலாமா?

Read Time:3 Minute, 34 Second

snaks_002.w540இரவுகளில் நொறுக்கு தீனி சாப்பிடக் கூடாது, ஜீரண உறுப்புகள் பாதிக்கப்படும் என சொல்லக் கேட்டிருப்பீர்கள். சில சமயங்களில் இரவு உணவு சாப்பிட்டாலும் தூங்குவதற்கு முன் திடீரென பசி எடுக்கும். புரண்டு படுப்பீர்கள். சில சமயத்தில் தூக்கமும் பாதிக்கும். இந்த மாதிரி சமயங்களில் என்ன பண்ணலாம்.

இரவுகளில் திடீரென பசி எடுத்தால் வெறும் வயிற்றோடு படுக்க தேவையில்லை. மிகவும் குறிப்பிட்ட வயிறு நிறையக் கூடிய ஸ்நேக்ஸ் சாப்பிடலாம். அவை ஜீரண மண்டலத்திற்கு பாதகம் அளிக்காது. நீங்களும் நிம்மதியாக தூங்கலாம். அப்படிப்பட்ட உணவுகள் எவை என பார்க்கலாமா?.

ஒரு கப் அளவு கார்ன் அல்லது ஓட்ஸ் ஃப்ளேக்ஸ் பாலில் கலந்து சாப்பிடலாம். இவைகள் பலவகை சார்ந்த கார்போஹைட்ரேட்களை கொண்டதால் ஜீரணிக்க அதிக நேரம் தேவைப்படாது. பாலில் கலந்து சாப்பிடுவதால் நிம்மதியாக தூக்கமும் வரும். இவற்றில் சர்க்கரை சேர்க்காமல் சாப்பிட வேண்டும்.

ஒரு கப் யோகார்ட் சாப்பிடலாம். இதில் ட்ரிப்டோஃபேன் உள்ளது. இவை வயிற்றிற்கு இதம் அளிக்கும். வயிறும் நிறைந்தது போலிருக்கும்.

ஆப்பிள், வாழைப்பழம், மாதுளை ஆகியவை கலந்து சாலட் செய்து ஒரு கப் அளவு சாப்பிடலாம். நல்ல தூக்கத்தை தரும். உடல் எடையும் ஏறாது.

கேரட்டையும் வெள்ளரிக்காயையும் நறுக்கி சாலட் செய்து சாப்பிடலாம். எளிதில் ஜீரணிக்கக் கூடியவை. சாலட் செய்யாமல் வெறுமனே சாப்பிடுவதும் நல்லதுதான். வயிறு நிறைந்துவிடும்.

மீன் வகைகளை இரவுகளில் சாப்பிடலாம் . கொழுப்பு இல்லாததால் இவை தீங்கு விளைவிக்காது. அதிகளவு புரோட்டின் மினரல் உள்ளது. எளிதில் ஜீரணமாகிவிடும்.

என்றைக்காவது பசி எடுக்கும்போது இரவுகளில் இப்படி ஸ்நேக்ஸ் சாப்பிடலாம். மத்தபடி இவற்றையும் சாப்பிட்டு விட்டே தான் தூங்க செல்ல வேண்டுமென்பதில்லை. அதே சமயம் பசியோடுதான் தூங்க வேண்டும் என்பதுமில்லை. வயிற்றிற்கு பாதகம் செய்யாத ஆரோக்கிய ஸ்நேக்ஸ் சாப்பிட்டு நீங்களும் நிம்மதியாக தூங்குங்கள். வயிற்றிற்கும் நிம்மதியை தாருங்கள்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இராணுவ சிப்பாய்க்கு நடந்த விபரீதம்…!!
Next post மரணம் எனும் கறுப்பு ஆடு…!!