புலிகளுடனான சமாதான முயற்சிகளில், நோர்வேயின் அனுபவம்..! “வன்னியிலிருந்து தந்திரமாக வெளியேறிய அன்ரன் பாலசிங்கம்!” (TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-10)

Read Time:11 Minute, 55 Second

timthumb (1)பல்வேறு சந்தேகங்களுக்கு மத்தியிலும் விடுதலைப்புலிகள் உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் பிரச்சனைகளைப் பேசித் தீர்க்கத் தயார் என ஏற்றுக்கொண்டது அரசு மட்டத்தில் ஓரளவு நிம்மதியை அளித்தது.

ஏனெனில் பிரிவினைக் கோரிக்கை இல்லாதது அவர்களுக்கு அது ஓர் வெற்றியாக அதாவது பேச்சுவார்த்தைகளின் வெற்றி எனக் கருதினார்கள்.

இதன் காரணமாகவே சமஷ்டி அடிப்படையில் பேசித் தீர்க்கத் தயாரானார்கள்.

இருப்பினும் சமஷ்டித் தீர்வை சிங்கள மக்கள் மத்தியில் ஏற்கச் செய்வது மிகவும் சிக்கலாக உள்ளது போலவே புலிகளுக்கும் ஐக்கிய இலங்கைக்குள் தீர்வை எட்டுவது பிரச்சனையாக காணப்பட்டது.

இதனால்தான் இரு தரப்பார் மத்தியிலும் நம்பிக்கை காத்திரமானதாக இருக்கவில்லை.

சமாதானச் செயலகத்தின் செயலாளராக இருந்த முன்னாள் ராஜதந்திரி பேர்னார்ட் குணதிலக அவர்களின் கருத்துப்படி புலிகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் எதிர்காலம் குறித்து அரசுடன் உடன்பாட்டிற்குச் செல்வதில் அதிக அக்கறை கொள்ளவில்லை.

அவர்கள் காலத்தைக் கடத்துவதிலேயே தமது கரிசனையைச் செலுத்தினார்கள்.

பேச்சுவார்த்தைகளின் போது புலிகள் வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகள், இடம் பெயர்ந்த மக்களின் அவலங்கள் குறித்தே வற்புறுத்தினார்கள்.

அரசாங்கம் இவை பற்றிப் பேசத் தயாராக இருந்த போதிலும், அரசியல் தீர்வு குறித்த பேச்சுவார்த்தைகளும் சமாந்தரமாக இடம்பெறுவதை வற்புறுத்தினார்கள்.

இதனால் பாலசிங்கம் பலத்த அழுத்தங்களை அனுபவித்தார்.

நோர்வே அதிகாரிகள் கொடுத்த அழுத்தங்களால் அவர் அரசியல் தீர்வு குறித்தப் பேச சம்மதித்தார். ஆனால் அவரால் அதனைத் தொடர முடியாது என்பதை இலங்கை அதிகாரிகள் உணரத் தொடங்கினர்.

ஏனெனில் ஒஸ்லோ பிரகடனத்தின் மூலம் பாலசிங்கம் அதிகளவு விட்டுக் கொடுத்துள்ளார் என்பது புலிகளின் உயர் மட்டக் கருத்தாக இருந்தது.

ஓஸ்லோ சந்திப்பைத் தொடர்ந்து பாலசிங்கம் ஒரு சில வாரங்கள் வன்னியில் சென்று உயர் மட்டத்துடன் பேசச் சென்றிருந்தார்.

ஆனால் சென்ற இரண்டு நாட்களுக்குள் அவர் தனது உடல் ஒத்துழைக்கவில்லை எனக் கூறி தான் வெளியேற விரும்பவதாக பேர்னார்ட் குணதிலகவிற்கு தகவல் அனுப்பினார்.

அரசு உலங்கு விமானத்தை அனுப்பி அவரை வெளியேற உதவியது.

ஆனால் பின்னர் வந்த செய்திகளின்படி பாலசிங்கம் – பிரபாகரன் ஆகியோருக்கிடையே பலத்த வாக்குவாதம் இடம்பெற்றதாகவும், அதன் விளைவாகவே உடல் சுகவீனத்தைக் காரணம் காட்டி வெளியேறியதாக தெரியவந்தது.

இலண்டன் வந்த பாலசிங்கம் வெளித் தொடர்புகளைத் துண்டித்துக் கொண்டார்.

நோர்வேயின் அழைப்பிற்காக காத்திருந்தார்.

பேச்சுவார்த்தைகளில் பங்கு கொள்ளும் வாய்ப்பு அவருக்கு பெருமளவு குறைந்தது. ஏனெனில் ஒஸ்லோ முடிவுகளில் தமிழ்ச் செல்வனும் திருப்தி அடையவில்லை.

இருப்பினும் புலிகளிற்கும், அரச தரப்பினருக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் போர் விஸ்தரிப்பைத் தடுப்பது, சுமுக நிலைக்கு நிலமைகளை மாற்றுவது என்பது குறித்துப் பேசப்பட்டது.

இவை குறித்து பேச்சுவார்த்தைகள் 14-12-2002 ஆரம்பமாகின.

அதில் அதி உயர் பாதுகாப்பு வலையத்தில் வாழ்ந்த மக்களை மீள அங்கு குடியமர்த்துவது தொடர்பான பேச்சுக்களே முக்கிய பங்கு வகித்தன.

இப் பிரச்சனையில் அமைக்கப்பட்ட குழுவினர் அப்போதைய யாழ். ராணுவ அதிகாரி சரத் பொன்சேகாவிடமிருந்து 21-12-2002 இற்கு முன்பதாக அறிக்கை ஒன்றைப் பெறுவதென தீர்மானித்தார்கள்.

புலிகளின் கோரிக்கையில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினரை (EPDP) யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்ற வேண்டுமெனவும் கேட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சரத் பென்சேகாவின் அறிக்கை 20-12-2002 இல் கிடைத்தது.

அந்த அறிக்கை தொடர்பாக அரச தரப்பில் சரத் பொன்சேகா, புலிகள் தரப்பில் கேணல் தீபன் மற்றும் கண்காணிப்புக் குழுத் தலைவர் ஜெனரல் வூர்கோவ்ட் ( General Furuhovde ) ஆகியோர் கலந்து கொண்டனர்.

பொன்சேகவின் அறிக்கையில் ராணுவம் தனது கட்டுப்பாட்டு எல்லையைக் குறைப்பதாயின் புலிகளும் தமது ஆயுதங்களைக் குறைப்பதையும், போராளிகளிடமிருந்து ஆயுதங்களைக் களைவதையும் மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டிருந்தது.

இக் கோரிக்கையை புலிகள் ஏற்காதது மட்டுமல்ல தம்மைச் சரணாகதி ஆக்குவதற்கான திட்டமாகவும் வர்ணித்தனர்.

அத்துடன் மனிதாபிமானக் கோரிக்கைகளோடு பாதுகாப்பு விவகாரங்களையும் இணைப்பதாகவும், யாழ்ப்பாண மக்களின் அவதிகளைக் குறைக்க ராணுவம் தயாராக இல்லை எனவும் குற்றம் சாட்டினர்.

இதில் முக்கிய அம்சம் என்னவெனில் சரத் பொன்சேகா சமர்ப்பித்த அறிக்கையில் புலிகளைப் பயங்கரவாதிகள் எனக் குறிப்பிட்டே அடையாளப்படுத்தினார்.

இது புலிகளுக்கு மிகுந்த விசனத்தை அளித்தது.

இச் சந்தர்ப்பத்தில் கண்காணிப்புக் குழு விடுத்த தனது வருடாந்த அறிக்கையில் போர் நிறுத்த ஒப்பந்தம் இரு தரப்பினர் மத்தியிலும் படைச் சமநிலை அவசியம் என்பதை ஒப்பந்தம் வலியுறுத்துவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அரசிற்கும், புலிகளுக்குமிடையேயான 4வது சுற்றுப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்தபோது மீண்டும் அதி உயர் பாதுகாப்பு வலையப் பிரச்சனை மீண்டும் தொடர்ந்தது.

அத்துடன் மக்களின் உடனடி மனிதாபிமானத் தேவைகள், புனர்வாழ்வுத் தேவைகள் என்பவை குறித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள குழு ஒன்று அமைக்கப்பட்டது.

இக் குழு ( Sub-Committee for Immediate Humanitarian and Rehabilitation Needs ) இக் குழு அமைக்கப்பட்ட பின்னர் இதற்கான பணத்தினைக் கையாழும் பொறுப்பு உலக வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டது.

இன்னொரு சர்வதேச நிறுவனம் இப் பிரச்சனையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதை வாசகர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.

புலிகளும் இதனை ஏற்று அதற்கு வடக்கு, கிழக்கு மீள் நிர்மாண நிதியம் ( North East Reconstruction Fund– NERF ) எனவும் பெயரிட்டனர்.

இதில் இரு தரப்பிலும் தலா 7பேர் நியமிக்கப்பட்டனர்.

இக் குழுவினர் பால் ரீதியான பிரச்சனைகள், மனித உரிமை மீறல் பிரச்சனைகளைக் கையாள தனித் தனிக் குழுவை அமைத்தனர்.

மனித உரிமைகள் தொடர்பான பிரச்சனைகளைக் கண்காணிக்க முன்னாள் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் இயன் மார்ட்டின் ( ஐயn ஆயசவin ) அவர்களுக்கு அழைப்பு அனுப்பவும் தீர்மானித்தனர்.

பாதுகாப்பு வலையம் தொடர்பாக சரத் பொன்சேகா அளித்த அறிக்கையை புலிகள் நிராகரித்த போது ராணுவ தரப்பு, புலிகளின் ஆயுதக் குறைப்பை அதனுடன் இணைத்து வலியுறுத்தியது.

இது பெரும் முறுகல் நிலையை ஏற்படுத்தியதால் போர் விஸ்தரிப்பைத் தடுக்கும் குழுவிலிருந்து தாம் தற்காலிகமாக வெளியேறுவதாக புலிகள் அறிவித்தனர்.

இருப்பினும் அதி உயர் பாதுகாப்பு வலையத்திற்கு வெளியில் உள்ள இடம்பெயர்ந்த மக்கள் குறித்து தொடர்ந்து பேசுவதாகவும் ஏற்றுக்கொண்டனர்.

vijaynambiar
அதி உயர் பாதுகாப்பு வலையத்தில் வாழ்ந்த மக்களை மீளக் குடியமர்த்துவது தொடர்பில் காணப்பட்ட இழுபறி நிலையை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் பாதுகாப்பு விடயங்களில் அனுபவஸ்தர் முன்னாள் இந்திய ராணுவ உயர் அதிகாரி நம்பியார் அவர்களை அழைத்து அறிக்கையைப் பெறுவதென தீர்மானித்தனர்.

நம்பியார் அவர்களால் தயாரிக்கப்பட்ட அறிக்கை வெளியிடப்பட்டதும் அரச தரப்பில் பெரும் ஏமாற்றம் காணப்பட்டது.

gotabaya -vijay nambiyar

நம்பியார் – இந்திய உயர் ராணுவ அதிகாரி இலங்கை ஊடகங்களால் அவமானப்படுத்தப்பட்டார்.

இலங்கைப் பத்திரிகைகள் அவரை மிகவும் விமர்ச்சித்து எழுதின. புலிகளும் அவ் அறிக்கை குறித்து திருப்தி அடையாத போதிலும் விமர்சனத்தைத் தவிர்த்தனர்.

அரசினதும், ஊடகங்களினதம் இப்போக்கு நம்பியார் அவர்களை இப்பிரச்சனையிலிரந்து வெளியேற வைத்தது. இச்செயல்களின் தாக்கங்கள் போரின் இறுதிக் காலத்தில் வெளிப்பட்டிருந்தன.

(வி.சிவலிங்கம்- -லண்டன்) (Thanks… ILAKKIYAA Inaiyam…) .தொகுப்பு… கி.பாஸ்கரன், சுவிஸ்

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தண்ணீரில் ஓடும் அதிசய பைக்!… லிற்றருக்கு எத்தனை கிலோ மீற்றர்னு தெரியுமா? வீடியோ
Next post யாழ் நகரைக் காக்க இளஞ்செழியனின் அதிரடி நடவடிக்கைகள்…!!