பிரதமருக்கு கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி…!!

Read Time:4 Minute, 23 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (1)ஏழை விளையாட்டு வீரர் – வீராங்கனைகளை அடையாளம் கண்டு உதவும்படி பிரதமர் மோடிக்கு உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு தேசிய அளவிலான விளையாட்டு வீராங்கனை விடுதி கட்டணம் செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்.

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவை சேர்ந்தவர் பூஜா (வயது 20) அங்குள்ள கால்சா கல்லூரியில் பிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

ஏழைக்குடும்பத்தை சேர்ந்த பூஜாவின் தந்தை ஒரு காய்கறி வியாபாரி.

தேசிய அளவிலான ஹேண்ட்பால் வீராங்கனையான பூஜாவால் கல்லூரி விடுதிக் கட்டணத்தை செலுத்த முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

கல்லூரியில் சேரும்போது, இலவசமாக கல்வி அளிப்பதாகவும் விடுதிகட்டணம் செலுத்தத் தேவையில்லை எனக் கூறிய நிர்வாகம், இரண்டாம் ஆண்டில் இருந்து அவருக்கு அளித்து வந்த சலுகைகளை நிறுத்தி விட்டதாக சொல்லப்படுகிறது.

இதனால், தினமும் வீட்டில் இருந்தே பூஜா கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். நாள் ஒன்றுக்கு 120 ரூபாய் தேவைப்பட்டுள்ளது.

பூஜாவின் தந்தையால் செலவு செய்ய முடியாத நிலை எனத் தெரிகிறது. இதையடுத்து பூஜா தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலைக்கு முன் பூஜா, பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில்,’

திடீரென்று எனக்கு அளிக்கப்பட்டு வந்த சலுகைகளை நிறுத்தி விட்டனர். தினமும் வீட்டில் இருந்து வருமாறு நிர்ப்பந்தித்தனர். அதற்கு மாதம் ரூ.3,750 தேவைப்பட்டது. எனது தந்தையால் சமாளிக்க முடியவில்லை.

என்னைப் போன்ற ஏழை விளையாட்டு வீரர்- வீராங்கனைகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கு இலவசமாக கல்வி வழங்கவும், விடுதி கட்டணங்களையும் அரசே ஏற்றுக் கொள்ளவும் பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் அந்த கடிதத்தில், பேராசிரியர் ஒருவர்தான் தனது தற்கொலைக்கு காரணம் என்றும் பூஜா குறிப்பிட்டிருந்தார்.

மாணவியின் தந்தை பிரபு அளித்த புகாரின் அடிப்படையில், பூஜா குறிப்பிட்டிருந்த பேராசிரியர் மீது மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதே வேளையில் ”மாணவியின் திறமையின்மை காரணமாக சலுகைகளை நிறுத்தியதாகவும் எனினும் ஆகஸ்ட் 18ம் தேதி முதல் அவர் மீண்டும் விடுதியில் தங்கிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்தது” எனக் கல்லூரி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

ஒலிம்பிக் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் தேசிய அளவிலான விளையாட்டு வீராங்கனை பிரதமருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழ் நகரைக் காக்க இளஞ்செழியனின் அதிரடி நடவடிக்கைகள்…!!
Next post திஸ்ஸ – கதிர்காமம் வீதி விபத்தில் மூவர் பலி..!!