கொலம்பியாவில் கார் குண்டு தாக்குதலில் 8 பேர் சாவு

Read Time:1 Minute, 0 Second

Colombia.Map.jpgகொலம்பியா நாட்டில் கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் ஜனாதிபதி அல்வாரோ வெற்றி பெற்றார். 2-வது முறையாக அவர் நாளை (திங்கட்கிழமை) பதவி ஏற்க இருக்கிறார். இந்த நிலையில் அங்கு புரட்சி ஆயுதப்படையினர் வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று அந்த நாட்டில் உள்ள கலிநகரில் போலீஸ் நிலையம் அருகே கார் குண்டு தாக்குதல் நடந்தது. இதில் 5 போலீசார் உள்பட 6 பேர் செத்தனர். தொலிமா என்ற இடத்தில் புரட்சி படையினருடன் நடந்த சண்டையில் 2 ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த ஒரு வாரத்தில் இது போன்ற மோதல் சம்பவங்களில் 32 பேர் உயிர் இழந்துள்ளதாக கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சூர்யா ஜோதிகா செப். 11ல் திருமணம்!
Next post திரிகோணமலையில் மீண்டும் குண்டு வீச்சு