உங்க கூந்தலுக்கு எதற்கு கண்டிஷனர்?…. கட்டாயம் உபயோகப்படுத்தனுமாம் பெண்களே…!!

Read Time:6 Minute, 48 Second

hair_conditionor_002.w540சிகைக்காய் பயன்படுத்த சோம்பல்பட்டு ஷாம்புவுக்கு மாறினோம். ஷாம்புவுக்குப் பிறகு பயன்படுத்த வேண்டிய ஹேர் கண்டிஷனரை எத்தனை பேர் பயன்படுத்துகிறோம்? ஷாம்பு நம் தலையில் உள்ள எண்ணெய் பிசுக்கு, தூசு, அழுக்குடன் ஈரப்பதத்தையும் சேர்த்து அகற்றிவிடுகிறது. இழந்த ஈரப்பதத்தை மீண்டும் அளிக்க ஹேர் கண்டிஷனர் அவசியம்.

ஹேர் கண்டிஷனர் என்பது என்ன?..

திரவ நிலையில் இருக்கும் சோப்பான கண்டிஷனரில், மாய்ஸ்சரைசர், எண்ணெய், சன் ஸ்கிரீன் போன்ற கூந்தலைப் பாதுகாக்கும் விஷயங்கள் நிறைந்துள்ளன.

எப்படிப் பயன்படுத்துவது?…

ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை சுத்தம் செய்த பிறகு, கண்டிஷனரைக் கூந்தலில் தடவி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். சில கண்டிஷனர்களை எண்ணெய் தேய்ப்பது போலவும் பயன்படுத்தலாம். கண்டிஷனரைப் பயன்படுத்தும்போது, முடி வேர்க்காலில் இருந்து ஒரு இன்ச் தள்ளியே பயன்படுத்த வேண்டும். ஏனெனில், வேர்க்கால் பகுதியில் இயற்கையாகவே ஈரப்பதம் தக்கவைக்க சுரப்பிகள் உள்ளன.

முடியின் வேர்க்கால்களில் அடர்த்தியாகப் படிந்தால், முடி உதிர்வுப் பிரச்னை ஏற்படலாம் என்பதால், கூந்தலில் மட்டும் தடவுவது நல்லது. அதுவும், எண்ணெய்ப் பசை கூந்தல் உடையவர்களுக்கு, வேர்க்கால்களில் கண்டிஷனர் படாமல் பார்த்துக்கொள்வது முக்கியம்.

ஷாம்பு பயன்படுத்திய பின், கண்டிஷனரைத் தடவி ஐந்து நிமிடங்கள் கழித்து அலச வேண்டும். 90 சதவிகித கண்டிஷனரை மட்டும் அலசினால் போதும். மீதம் இருக்கும் 10 சதவிகித கண்டிஷனர், கூந்தலைப் பளபளப்பாகவும், பட்டுப்போன்றும் மாற்றும். அதில் உள்ள மாய்ஸ்சரைசர்கள் முடியில் மீதம் இருப்பது கூந்தலுக்கு நல்லது.

ஏன் பயன்படுத்த வேண்டும்?…

கூந்தலின் ஆரோக்கியம் மேம்படும். மேலும், கூந்தலை சூரியக்கதிர்களின் பாதிப்பு, வறண்டுபோதல், உடைதல் ஆகிய பிரச்னைகளில் இருந்து பாதுகாத்து, போஷாக்கு தருகிறது.

ஷாம்புவால் அலசும்போது, கூந்தலில் உள்ள தாதுக்கள், இயற்கையாக தலையில் சுரக்கும் எண்ணெய் ஆகியவை நீங்கிவிடுகின்றன. இவை, புதுப்பிக்கப்படவும் மீண்டும் உருவாகவும் கண்டிஷனர்கள் உதவுகின்றன.

கூந்தலின் பி.ஹெச் அளவு சமநிலையில் (pH level) இருக்குமாறு பார்த்துக்கொள்கிறது. சுத்தமான, மென்மையான, ஆரோக்கியமான கூந்தலாக மாற்றுகிறது. சிலருக்கு, கூந்தலில் அதிகமாகச் சிக்கு விழும். கண்டிஷனரால், இது பெரும்அளவு தடுக்கப்படுகிறது.

கண்டிஷனரின் வகைகள்

பேக் கண்டிஷனர் (Pack conditioner)

கெட்டியான, அடர்த்தியான, கொழகொழப்பான திரவ நிலையில் இருக்கும். அலிபேட்டிக் (Aliphatic) கொழுப்பு அமிலங்கள் மற்றும் சாச்சுரேட்டட் (Saturated) கொழுப்பு அமிலங்கள் இதில் இருப்பதால், கூந்தலின் மீது அடர்த்தியான படிமம் போல படிந்து, கூந்தலைப் பாதுகாக்கும்.

லீவ்-இன் கண்டிஷனர் (Leave-in conditioner)

இதில், அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலம் நீர்த்த நிலையில் இருக்கும். மெல்லிய படிமம் போல படிந்து, கூந்தலை மென்மையாக்கும். சுருட்டை முடி உள்ளவர்கள், அடர்த்தியான சுருள் முடி (Kinky hair) உள்ளவர்கள் பயன்படுத்தலாம்.

சாதாரண கண்டிஷனர் (Ordinary conditioner)

பேக் மற்றும் லீவ்-இன்னில் உள்ள பண்புகளைக் கொண்டதுதான் சாதாரண கண்டிஷனர். ஷாம்பு போட்டுக் கூந்தலை அலசிய பிறகு, பயன்படுத்தப்படும் சாதாரண கண்டிஷனர் இது. கடைகளில் இவை ஷாம்புவுடன் சேர்த்தே விற்கப்படுகின்றன.

ஹோல்டு கண்டிஷனர் (Hold conditioner)

நமக்குத் தேவையான வடிவங்களில் கூந்தலின் அமைப்பை மாற்றி, அது கலையாமல் இருக்கப் பயன்படுத்தப்படும் கண்டிஷனர் இது. ஜெல் வகைகளில் கிடைக்கும். பார்ட்டி, போட்டோ ஷூட், நிகழ்ச்சிகளுக்குச் செல்பவர்கள் இதைப் பயன்படுத்தலாம்.

வறண்ட, சேதமடைந்த, பொலிவற்ற, பிளவுகள் கொண்ட கூந்தலுக்கு…

கண்டிஷனரைச் சரியாகத் தேர்வுசெய்தாலே, கூந்தலின் பாதிப் பிரச்னை நீங்கிவிடும். ஹைட்ரேட்டி (Hydrating), மாய்ஸ்சரைசிங் (Moisturizing), ஸ்மூத்திங் (Smoothing), டேமேஜ்ரிப்பேர் (Damage repair), கண்ட்ரோல் ஃப்ரீஸ் (Control frizz) என்று குறிப்பிடப்பட்டுள்ள கண்டிஷனர்களைப் பயன்படுத்தலாம்.

வால்யுமைசிங் (Volumizing), லைட் (Light), ஸ்ட்ரென்த்தனிங் (Strengthening), பேலன்சிங் (Balancing) என்று குறிப்பிடப்பட்டுள்ள கண்டிஷனர்களைத் தவிர்க்க வேண்டும். டீப் கண்டிஷனரை (Deep Conditioner), மாதத்தில் நான்கு முறை பயன்படுத்தலாம். இதனால், சேதமடைந்த கூந்தல் சரியாகும்; சேதமடைவது தடுக்கப்படும்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாம் உணவில் சேர்க்கும் சின்ன சின்ன விஷயங்களின் அற்புதங்கள்…!!
Next post அழுகிய நிலையில் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு – கொழும்பில் சம்பவம்…!!