வன்னிப்புலிகளின் கட்டுவன்வில் முகாம் மீது கருணாஅம்மான் தரப்பினர் தாக்குதல்

Read Time:2 Minute, 3 Second

Karuna-Piraba.jpgஇன்று அதிகாலை 12:45 மணியளவில் மட்டக்களப்பு வன்னிப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள போரதீவு கட்டுவன்வில் பகுதியில் அமைந்திருந்த வன்னிப்புலிகளின் முகாம் ஒன்று கருணாஅம்மானின் தமிழீழமக்கள் விடுதலைப் புலிகளினால் தாக்கியழிக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதலின் போது வன்னிப்புலிகளின் தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் முகாமிலிருந்த பெருந்தொகையான ஆயுதங்களும் தமிழீழமக்கள் விடுதலைப் புலிகளினால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் தாக்குதலில் வன்னிப்புலிகளின் முகாம் முற்றாகத் தகர்க்கப்பட்டு தீ மூட்டீ எரிக்கப்பட்டதாகவும் தெரிய வருகின்றது.

மேற்படித் தாக்குதலானது கருணாஅம்மானின் தமிழீழமக்கள் விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர்களில் ஒருவரான சிந்துஐன் என்பவர் தலைமையில் சென்றவர்களினாலேயே நடாத்தப்பட்டதாகவும் இதன்போது முகாமில் இருந்த ஏனைய வன்னிப்புலிகளின் உறுப்பினர்கள் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் முகாமை விட்டு தப்பியோடியுள்ளனர்.

இதன் போது அம்முகாமில் இருந்து டி-56 ரக துப்பாக்கிகள் 02, கைக்குண்டுகள் 08, மோட்டார் சைக்கிள் 01, தளபாடங்கள் என்பன தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளினால் கைப்பற்றப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Karuna-Piraba.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கருணாஅம்மான் தரப்பினரால் சிறைபிடிக்கப்பட்ட வன்னிப்புலிகள் இவர்கள்..
Next post லெபனான் மீது விடிய விடிய தாக்குதல்: 15 கிராமங்கள் தரைமட்டம்