இளம் பெண்களுடன் விடிய, விடிய கும்மாளம்: உசைன் போல்ட் மீது காதலி ஆத்திரம்…!!

Read Time:3 Minute, 47 Second

201608261126495279_Olympian-Usain-Bolt-Caught-In-Bed-With-Another-Woman_SECVPFஜமைக்கா நாட்டை சேர்ந்த ஓட்டப் பந்தய வீரரான உசைன் போல்ட், ரியோ ஒலிம்பிக் போட்டியில் 3 தங்கபதக்கங்களை வென்றார். லண்டன், பிஜீங், ரியோ டி ஜெனீரோ நகரங்களில் வரிசையாக நடந்த 3 ஒலிம்பிக் போட்டிகளில் இவர் மொத்தம் 9 தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில், உசைன் போல்ட் தொடர்பாக பரபரப்பை கிளப்பும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

ரியோ ஒலிம்பிக்கில் 4×100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற உசைன் போல்ட், அதற்கு அடுத்த நாள் தனது 30-வது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது நடன கிளப்பிற்கு சென்று கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அவர் ஆபாச நடனம் ஆடுவது போன்ற காட்சி வெளியானது.

இதனையடுத்து, மற்றொரு பெண்ணுடன் அவர் படுக்கையில் மிகவும் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உசேன் போல்டுடன் படுக்கையில் நெருக்கமாக இருக்கும் பெண் ரியோ டி ஜெனிரோவை சேர்ந்த 20 வயதாகும் கல்லூரி மாணவி ஜேடி துர்தே என்பதும், அவருக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது.

இந்த நிலையில் லண்டனில் உள்ள இரவு நேர கிளப்பிற்கு சென்ற போல்ட், அங்கு பத்துக்கும் மேற்பட்ட பெண்களுடன் விடியவிடிய ஆட்டம், பாட்டம் என்று கும்மாளம் போட்டுள்ளார்.

உசேன் போல்ட் 26 வயதாகும் மாடல் அழகி கசி பென்னட் என்பவரை காதலிப்பதாக, அவரது சகோதரி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், உசைன் போல்ட்டின் இந்த லீலைகள் அவரது காதலியான கசி பென்னட்டை கடுப்பாக்கியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர் சமூகவலைதளங்களில் கோபமாக கருத்து வெளியிட்டு வருகிறார்.

உசைன் போல்ட் பற்றி வெளியாகி வரும் மீம்ஸ்களுக்கு கசி பென்னட் லைக் போட்டு தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

கசி பென்னட் அருகில் கூட வர முடியாத பெண்ணுடன் ஒரு இரவை கழித்து வாழ்க்கையை வியாபாரமாக்கி விட்டதாக உசேன் போல்டுக்கு ஒரு பெண் அனுப்பிய டுவிட்டையும், கசி பென்னட் லைக் செய்துள்ளார்.

உசைன் போல்ட் மீது அவரது காதலியான கசி பென்னட் கடுப்பில் உள்ள நிலையில், அவரை பேட்டி எடுக்க அந்நாட்டு ஊடகங்கள் போட்டி போட்டு வருகின்றன.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குற்றத்தை மறைக்க கப்பம் பெற்ற பொலிஸார்…!!
Next post பொள்ளாச்சி அருகே பாலியல் பலாத்காரத்தில் 8 மாத பெண் குழந்தை கொலை: பீகாரை சேர்ந்த வாலிபர் கைது…!!