திருவள்ளூர் மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு மேலும் ஒரு சிறுமி பலி…!!

Read Time:7 Minute, 53 Second

201608261304104503_thiruvallur-district-fever-more-one-child-death_SECVPFதிருவள்ளூர் மாவட்டத்தில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. திருத்தணியை அடுத்த காவேரிராஜபுரம் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம காய்ச்சல் பாதித்த 4 சிறுவர்கள் அடுத்தடுத்து பலியானார்கள்.

இதைத் தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் காவேரிராஜபுரம் கிராமத்தில் 10-க்கும் மேற்பட்ட மருத்துவ குழு அமைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

ஆனாலும் மர்ம காய்ச்சல் பாதிப்பு கட்டுக்குள் வர வில்லை. அருகில் உள்ள கிராமத்துக்கும் காய்ச்சல் பரவி வருகிறது.

திருத்தணியை அடுத்த பொன்பாடி மேட்டுக் காலனியை சேர்ந்த குணசேகர் (6), கரண் (8), பிரவீன்குமார் (8), தரூண் (2), சஞ்சய்காந்தி (37), தங்கராஜ் (50), மணிகண்டன் (28), பாலகிருஷ்ணன் (45), சாமிநாதன் (30), முருகையா (60), சவுந்தரி (35), அமுதா (32), லட்சுமி ஆகியோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.

அவர்களுக்கு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதே போல் பொன்னேரியை அடுத்த கீரப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த வைஷ்ணவி (11), திலீபன் ஆகியோரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு காய்ச்சல் பாதித்த வைஷ்ணவிக்கு உடல் நிலை மோசமானது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் வைஷ்ணவி பரிதாபமாக இறந்தார். அவர் கீரப்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.

வைஷ்ணவி இறந்ததது பற்றி அறிந்ததும் கீரப்பாக்கம் கிராமத்தில் பொது மக்கள் இடையே பீதி ஏற்பட்டுள்ளது. சுகாதார அதிகாரியும் கிராமத்துக்கு விரைந்துள்ளனர்.

இதற்கிடையே நேற்று ஒரே நாளில் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் மட்டும் 20 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் பெண்கள் 4 பேர், 8 பேர் சிறுமிகள். இதே போல் பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் 17 பேர் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் 4 பேர் குழந்தைகள்.

அவர்களின் ரத்தம் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவர்கள் அனைவரும் ஆதிமாபுரம், நெடுவரம் பாக்கம், மேட்டுக்குப்பம், ஆண்டார் குப்பம், திருவாய்ப்பாடி, பொன்னேரி, கீரப்பாக்கம், சூளைமேனி, குன்னவனம், தோம்பூர், பள்ளிப்பட்டு, தாழவேடு, ஊத்துக்கோட்டை, நெடுவரம், புல்லரம்பாக்கம், திருவள்ளூர் ராமாபுரம், திருநின்றவூர் பகுதியை சேர்ந்தவர்கள்.

மர்ம காய்ச்சல் பாதிப்பு மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பரவி உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

மாவட்டம் முழுவதும் கிராமங்களில் சுகாதாரப் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது. கொசு மருந்து அடித்தல் மற்றும், ஆயிரம் லிட்டர் குடிநீருக்கு 4 கிராம் பிளீச்சிங் பவுடர் வீதம் தெளிக்கப்படுகிறது. மேலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் காய்ச்சலை கட்டுப்படுத்த தனித்தனி குழுக்களாக ஆய்வு செய்து வருகிறார்கள்.

வீடு வீடாக நிலவேம்பு கசாயம் கொடுத்தல் மற்றும் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வும் அதிகாரிகள் ஏற்படுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை இன்று காலை பொன்னேரி சார்-ஆட்சியர் தண்டபானி மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆறுதல் கூறினர். மேலும் உரிய சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டனர்.

காய்ச்சல் பாதித்தவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க சென்னை மருத்துவ கல்லூரியில் இருந்து திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு 2 சிறப்பு டாக்டர்களும், திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு 6 டாக்டர்களும் அனுப்பப்பட்டு உள்ளனர். அவர்கள் மர்ம காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் வரும்வரை சிகிச்சை அளிப்பார்கள்.

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள 61 ஊராட்சிகளிலும் மர்ம காய்ச்சலை தடுக்க முன்எச்சரிக்கை சுகாதார பணிகளை மேற் கொள்ளும்படி ஊராட்சிகளுக்கான உதவி இயக்குனர் ஜாகீர் உசேன் உத்தர விட்டுள்ளார்.

இதனையடுத்து கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள 61 ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் அதன் செயலர்களுக்கான சிறப்பு கூட்டம் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கிராம ஊராட்சிகளுக்கான வட்டார வளர்ச்சி அதிகாரி கவுரி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அதிகாரி ராஜேந்திரபாபு, துணை வட்டாரவளர்ச்சி அலுவலர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளை உடனடியாக சுத்தம் செய்வது மற்றும் தொட்டிகளை சுற்றி உள்ள பகுதிகளையும், தெருக்களையும் சுத்தம் செய்திடவும், இது தொடர்பாக கிராம மக்கள் மத்தியில் சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்திடவும் வலியுறுத்தப்பட்டது.

மேலும் கிராமங்களில் உள்ள சாக்கடை மற்றும் சுகாதாரமற்ற நீர் ஆதரங்களில் கொசு தெளிப்பான் மூலம் மருந்து அடித்து கொசு உற்பத்தியை முற்றிலும் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொருக்குப்பேட்டையில் கல்லூரி மாணவர் மீது இளம்பெண் கற்பழிப்பு புகார்…!!
Next post டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டு பாதுகாப்பு படை வீரர் தற்கொலை..!!