காதலுக்கு விளக்கம் தெரியனுமா?

Read Time:3 Minute, 24 Second

Couple-32காதலுக்கு விளக்கம் சொல்வது ரொம்பக் கஷ்டம். ஆனால் காதல் எப்படியெல்லாம் ஒரு மனிதனை மாற்றுகிறது, அது எப்படி உணர வைக்கிறது என்பற்கு நிறைய உதாரணங்களைக் காட்டலாம். ஜெர்மனியைச் சேர்ந்த தத்துவ ஞானி பிரட்ரிச் வில்ஹெல்ம் நிட்சே என்பவர் காதல் குறித்து படு அழகான மேற்கோள்களைச் சொல்லியுள்ளார்.. அவரது ஒவ்வொரு வார்த்தையும் அத்தனை அட்டகாசமாக இருக்கிறது.

அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்களேன்…
– ஒவ்வொரு காதலிலும் ஒரு பைத்தியக்காரத்தனம் இருக்கும். அப்போதுதானே அதைக் காதல் என்றே சொல்ல முடியும். ஆனால் பாருங்கள், அந்தப் பைத்தியக்காரத்தனம் ஒவ்வொன்றிலும் ஒரு அழகான காரணமும் ஒளிந்திருக்கும்.அதுதான் அந்தக் காதலை மேலும் அழகாக்குகிறது.

– ஒரு முழுமையான மனிதனைக் கண்டுபிடித்துக் காதலிப்பது நிச்சயம் சரியான காதலாக இருக்க முடியாது. ஆனால் சின்னச் சின்னக் குறைகளை உடைய, முழுமை இல்லாத ஒரு நல்ல மனிதனைக் கண்டுபிடித்து அவனைக் காதலித்து அவனை முழுமையான மனிதனாக மாற்றுவதே உண்மையான காதல்.

– நான் உன்னை நிச்சயம் ஒருபோதும் வெறுத்ததில்லை. ஒரு வேளை உன் மீது நான் கோபத்தைக் கொட்டினாலோ அல்லது வெறுப்புடன் பேசினாலோ நிச்சயம் அது அதிருப்தியின் அடையாளம் அல்ல. மாறாக, உன் மீது நான் எத்தனை அன்பு செலுத்துகிறேன் பார் என்பதை உணர்த்தும் ஆதங்க வார்த்தைகள்தான்.

– உன்னைச் சந்தித்தது விதி… உன்னுடன் நட்பு கொண்டது ஒரு வாய்ப்பு. ஆனால் உன்னிடம் காதலில் வீழ்ந்தது, என்னையும் அறியாமல் நடந்தது, என்னால் கட்டுப்படுத்த முடியாமல் போனது. அதுதான் காதல்….!

– என்னிடம் நீ சொன்ன பொய்க்காக நான் கோபமாக இல்லை. என்னை நீ நம்பவில்லையே என்ற ஆதங்கம்தான் என் உண்மையான கோபத்திற்குக் காரணம்.

– காதல் ஆறுதல் அல்ல. அது ஒளி, வழிகாட்டி, வெளிச்சக் கீற்று.

– நான் இன்னும் வாழ்கிறேன், தொடர்ந்தும் வாழ்வேன்.. நீ என்னுள் உயிர்ப்புடன் இருக்கும் வரை – அதே காதலுடன்.
எவ்வளவு அருமையான வார்த்தைகள்…

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதில் இருக்கும் அழுக்கை சுத்தம் செய்ய கூடாதாம்!… அது ஏன் தெரியுமா?
Next post தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா பிறந்த இடம் யாருக்காவது தெரியுமா…?