அமெரிக்க பாரிய போர்க்கப்பல் கொழும்பு வருகிறது…!!

Read Time:2 Minute, 6 Second

USS_Theodore_Roosevelt_ucak_gemisi-300x225-300x225அமெரிக்கக் கடற்படையின் பாரிய போர்க்கப்பலான யுஎஸ்எஸ் பிராங்க் கேபிள் ( ஏ.எஸ்-40) நாளை கொழும்புத் துறைமுகத்துக்கு வரவுள்ளதாக, கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.

வழக்கமான எரிபொருள் நிரப்பும் பயணமாகவே கொழும்புத் துறைமுக வருகை அமைந்திருப்பதாகவும், இதன்போது அமெரிக்க கடற்படை மாலுமிகள் தரையில் விடுமுறையைக் கழிக்கவுள்ளதாகவும் அமெரிக்கத் தூதரக அறிக்கை கூறுகிறது.

இந்தோ- பசுபிக் பிரதேசத்தில் மீட்பு மற்றும் உதவிப் பணிகளை மேற்கொள்வதற்கும், அமெரிக்கப் படைகளுக்கு உதவவும், நீர்மூழ்கி விநியோக, உதவிக் கப்பலான யுஎஸ்எஸ் பிராங்க் கேபிள், குவாம் தீவில் நிலை கொண்டிருக்கிறது.

இந்தக் கப்பலில் 500 மாலுமிகள் வரை பணியாற்றுகின்றனர்.

இந்த ஆண்டில்,இலங்கை பயணம் மேற்கொள்ளும் மூன்றாவது அமெரிக்கப் போர்க்கப்பல் இதுவாகும்.

ஏற்கனவே யுஎஸ்எஸ் புளூ ரிட்ஜ், யுஎஸ்எஸ் நியூ ஓர்லியன் ஆகிய அமெரிக்கக் கடற்படைக் கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்துக்கான பயணங்களை மேற்கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த இலங்கை அகதி பலி…!!
Next post வெளிநாட்டவர்கள் நாட்டில் மாணிக்கக்கல் அகழ்வதற்கு தடை…!!