பெல்ஜியம் குற்றவியல் நிறுவனத்துக்கு தீ வைப்பு…!!

Read Time:2 Minute, 17 Second

201608300713592124_Explosion-at-Belgian-Crime-Is-Linked-to-Terrorism_SECVPFபெல்ஜியம் நாட்டின் தேசிய குற்றவியல் நிறுவனம் பிரசல்ஸ் நகரில் உள்ளது. நேற்று அதிகாலை 3 மணி அளவில் இங்கு புகுந்த மர்மநபர்கள் அங்குள்ள ஆய்வகத்துக்கு தீ வைத்தனர். தீ மளமளவென பரவியதால் சிறிது நேரத்தில் அந்த ஆய்வகம் வெடித்துச் சிதறியது. இதைத்தொடர்ந்து அங்கு 30-க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து தீயணைக்கும் வண்டிகளில் வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் யாரும் காயம் அடையவில்லை.

இதுபற்றி பிரசரல்ஸ் அரசு வக்கீல் இனே வான் வைமெர்ச் கூறும்போது, “மர்ம நபர்கள் ஆய்வகத்துக்கு தீ வைத்தபோது அங்கு யாரும் இல்லை. ஆய்வகத்துக்கு வேண்டுமென்றே தீ வைக்கப்பட்டு உள்ளது. தீ வைத்தவர்கள் வெடிபொருட்களை வீசவும் இல்லை. அங்கு வெடிபொருட்களை வைக்கவும் இல்லை. இதனால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தில் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்பதை மறுக்க இயலாது” என்றார்.

பாரீஸ் மற்றும் பிரசல்ஸ் நகரங்களில் கடந்த ஓராண்டாக ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து இருப்பதால் பெல்ஜியம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் இந்த தீ வைப்பு சம்பவம் நடந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக நாட்டின் கடன் சுமை மேலும் குறைக்கப்படும்…!!
Next post இரு மனம் உடைந்தால் நடப்பது என்ன?