பாகிஸ்தானில் விமானியாக பணிபுரியும் அக்கா-தங்கை ஒரே விமானத்தை ஓட்டி சாதனை…!!

Read Time:1 Minute, 42 Second

201609011038469636_Pakistani-Pilot-Sisters-Make-History-By-Co-Flying-Boeing-777_SECVPFபாகிஸ்தானை சேர்ந்தவர் மரியம் மசூத். இவர் பாகிஸ்தான் இன்டர்நே‌ஷனல் ஏர்லைன்ஸ் விமானத்தில் பெண் விமானி ஆக இருக்கிறார். இவர் போயிங் 777 ரக விமானம் ஓட்டி வருகிறார்.

அவரது தங்கை எர்ரம் மசூத். இவரும் விமானி ஆனார். இவரும் பாகிஸ்தான் இன்டர்நே‌ஷனல் ஏர்லைன்சில் பணிபுரிகிறார்.

இந்த நிலையில் எர்ரம் மசூத் பாகிஸ்தான் இன்டர் நே‌ஷனல் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில் போயிங் 777 ரக விமானம் ஓட்டும் அளவுக்கு பதவி உயர்வு பெற்றார்.

எனவே, அக்கா-தங்கை இருவரும் ஒரே ‘போயிங் 777’ ரக விமானத்தை சமீபத்தில் ஓட்டி சாதனை படைத்தனர். இத்தகவலை பாகிஸ்தான் இன்டர்நே‌ஷனல் ஏர்லைன்ஸ் செய்தி தொடர்பாளர் தன்யால் ஹிலானி தெரிவித்தார்.

அக்காள்-தங்கை இருவரும் லாகூர்-கராச்சி-மான் செஸ்டர், நியூயார்க் மற்றும் லண்டனுக்கு விமானம் ஓட்டியுள்ளனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சீ.வி.விக்னேஸ்வரன் – பான் கீ மூன் சந்திப்பு…!!
Next post மஸ்கட்டில் 50 பைசா நாணயத்தை விழுங்கிய இந்திய சிறுவன்: 10 நாட்களுக்கு பிறகு சிகிச்சை மூலம் அகற்றம்…!!