By 1 September 2016 0 Comments

15 லட்சம் பெறுமதியான முதிரை மரக் குற்றிகளுடன் ஒருவர் கைது…!!

625.117.560.350.160.300.053.800.210.160.90 (2)கிளிநொச்சி, பளைப் பிரதேசத்தில் வைத்து சுமார் பதினைந்து லட்சம்பெறுமதியான முதிரை மரக் குற்றிகளுடன் ஒருவரை பளைப் பொலிசார் இன்று கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

இன்று வியாழக்கிழமை காலை எட்டு மணியளவில் பளைப் பொலிசாருக்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்துமன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பாரஊர்தி ஒன்றில் எருவினைக்கொண்டு செல்வதனைப் போல் கடத்தப்பட்ட சுமார் பதினைந்து லட்சம் பெறுமதியான 39முதிரை மரக் குற்றிகளைக் கைப்பற்றியதுடன், வாகனச் சாரதியையும் இத்தாவில் பகுதியில் வைத்துக்கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பளைப் பொலிசார் மேற்கொண்டுவருவதுடன், நாளை வெள்ளிக்கிழமை குறித்த நபரினை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த இருப்பதாக பளைப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..



Post a Comment

Protected by WP Anti Spam