உயிருக்கு போராடிய மாணவிகளை காப்பாற்றிய 10 வயது சிறுவன்…!!

Read Time:2 Minute, 2 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (1)பீகாரின் Jehanabad பகுதியில் 10 வயது சிறுவன் தன் உயிரை பணயம் வைத்து நீரில் மூழ்கிய நான்கு பள்ளி மாணவிகளை காப்பாற்றியுள்ளான்.

கோபால்பூர் கிராமத்தை சேர்ந்த மாணவிகள் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் வழியில் ஆற்றைக் கடந்தபோது எதிர்பாராத விதமாக தடுமாறி ஆற்றில் விழுந்துள்ளனர்.

ஆற்றில் நீரின் ஓட்டம் வேகமாக இருந்ததால், அவர்கள் உயிருக்கு போராடியுள்ளனர். அசம்பாவிதத்தை கண்ட அங்கிருந்த 10 வயது சிறுவன் தன் உயிரை பற்றி கவலைப்படாமல் ஆற்றில் குதித்து ஒவ்வொரு மாணவியாக மீட்டு கரை சேர்த்துள்ளார்.

இதில் இரண்டு மாணவிகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர், துணிச்சலுடன் செயல்பட்ட சிறுவன் நான்கு மாணவிகளின் உயிரை காப்பாற்றியுள்ளார்.

உயிரை காப்பாற்றிய சிறுவனை பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும், அவரது வீரத்தை அங்கீகாரிக்கும் வகையில் அரசாங்கம் சிறுவனுக்கு தேசிய வீரதீர விருது வழங்க பரிந்துரை செய்ய வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பான் கீ மூன் இன்று யாழ். விஜயம்! ஆளுநர், முதலமைச்சரையும் சந்திக்கிறார்…!!
Next post தமிழர்களின் மீன் பிடி வித்தையைப் பாருங்கள்! உங்களால் கூட நம்ப முடியாத வீடியோ…!!