சட்டமா அதிபரின் தாமதத்தால் வெளிநாடு தப்பிச் சென்றுள்ள குற்றவாளிகள்…!!

Read Time:2 Minute, 15 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90பொலிஸார் கடந்த 20 ஆண்டுகளில் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஆலோசனை கோரி சுமார் 19 ஆயிரத்து 500 விசாரணைகளை அனுப்பியுள்ளனர்.

இதனால், பொலிஸ் விசாரணை அறிக்கைகள் திணைக்களத்தில் குவிந்து கிடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்து கடந்த 18 மாதங்களில் நிதி மோசடி விசாரணைப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவினர் சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரி அனுப்பிய விசாரணை அறிக்கைகளும் இந்த குவியலுடன் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

விசாரணைகளின் தாமதம் காரணமாக சந்தேக நபர்கள் இரகசியமான முறையில் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர்.

உதாரணமாக தமிழ் மாணவர்கள் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப்படும் கடற்படை அதிகாரிகள் இவ்வாறு நாட்டை விட்டு தப்பிச் செல்ல தயாராகி வருவதாக கடற்படையின் தகவல்கள் கூறுகின்றன.

அண்மையில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்திய யாழ், புங்குடுதீவு வித்தியா கொலை வழக்கு மற்றும் விமல் வீரவங்ச மற்றும் சசி வீரவங்ச ஆகியோரின் வழக்கு அறிக்கைகளும் இந்த வரிசையில் இணைந்துள்ளதால் விசாரணைகள் தாமதமாகி வருகின்றன.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post WWE யில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட வீடியோ இதுதான்! ஜான் சீனாவின் முத்தக்காட்சி! வீடியோ
Next post யாழ்.பல்கலைக்கழக மோதல் விவகாரம்! ஏழு மாணவர்களுக்கு எதிராக வழக்கு..!!