குளிக்கும் போது தவிர்க்க வேண்டிய 5 தவறுகள்…!!

Read Time:4 Minute, 19 Second

Couple-Bathகுளிக்கும் போது நம்மையே அறியாமல் நாம் செய்யும் சின்ன சின்ன தவறுகள் நிறைய இருக்கின்றன. இதில் சிலவன நல்லது என நினைத்து செய்யும் காரியங்களினால் கூட உடல்நல அபாயம் ஏற்பட்டு தங்களை மக்கள் அணுகுகிறார்கள் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆண்களே! ‘அந்த’ இடத்தில் ரொம்ப அரிக்குதா? அதை தடுக்க இதோ சில டிப்ஸ்…

பாத்ரூம் ஸ்பான்ஜ் அழுத்தமாக பயன்படுத்துதல், சுடுநீரில் குளித்தல், பாத்ரூமில் உறவில் ஈடுபடுதல் என நாம் இதுவெல்லாமா தவறு என எண்ணுவதால் கூட ஏடாகூடமாக ஏதேனும் நடந்து மருத்துவர்களை மக்கள் அணுகுகிறார்கள் என அவர்கள் கூறுகின்றனர். உப்பு தண்ணீரில் குளிப்பதால் கிடைக்கும் அருமையான 10 நன்மைகள்!!! இனி, குளிக்கும் போது தவிர்க்க வேண்டிய 5 தவறுகள் என மருத்துவர்கள் கூறும் அவற்றை பற்றி காண்போம்..

பழைய ஷவர் ஹெட் பழைய ஷவர் ஹெட்டில் நிறையை அபாயமான பாக்டீரியாக்கள் தங்கியிருக்கிறது. இதனால் சருமம் மற்றும் உடலினுள் பாக்டீரியா தாக்கம் அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கின்றன என கொலராடோ பல்கலைக்கழக ஆய்வில் கண்டரிந்துக் கூறப்பட்டுள்ளது.

பாத்ரூம் மேட் கடந்த 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட ரிப்போர்ட்டில் இருந்து ஏறத்தாழ 2,30,000 பேருக்கு மேல் பாத்ரூம் மேட் இல்லாததால் கால் வழுக்கி விழுந்து காயமடைந்துள்ளனர் என அறியப்பட்டுள்ளது. இதில் 20% -க்கு மேலானவர்கள் அபாயமான காயம் அடைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாத்திங் ஸ்பான்ஜ் சிலர் அழுக்கு போக தேய்த்து குளிக்கிறான் என பாத்திங் ஸ்பான்ஜ் தேய குளிப்பார்கள். உண்மையில் பாத்திங் ஸ்பான்ஜ்-ல் நிறைய கிருமிகள் ஒட்டிக்கொண்டிருக்கும்.

பாத்திங் ஸ்பான்ஜ் அதை மென்மேலும் அதிகமாக தேய்த்து குளிப்பதால் சரும தொற்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே, பாத்திங் ஸ்பான்ஜ்-யும் குளித்த பிறகு கழுவி பயன்படுத்த வேண்டியது அவசியம். மேலும் அதை அவ்வப்போது மாற்றிவிடுங்கள்.

சுடுநீர் குளியல் இரவு உறங்குவதற்கு முன்னர் குளிப்பது நல்லது. ஆனால், சுடுநீரில் குளிப்பதை தவிர்த்து, இதமான நீரில் குளிப்பது தான் நல்லது. இது நன்கு ஆழமான உறக்கம் பெறவும், அதிகாலை சீக்கிரம் எழவும் பயனளிக்கும்.

உடலுறவு ‘தி கிரேட் லவ்வர் ப்ளே’ எனும் நூலின் எழுத்தாளர், பல தம்பதிகள் குளிக்கும் போது உடலுறவில் ஈடுபடுவதை விரும்புகிறார்கள். ஆனால், பல சமயங்களில் தவறுதலாக விழுந்து அடிப்பட்டு அபாயமான நிகழ்வுகளை சந்தித்தவர்களும் இருக்கிறார்கள். எனவே, ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம் என குறிப்பிட்டு கூறியுள்ளார்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரங்கலயில் 56 வயதானவரைக் காணவில்லை…!!
Next post குட்டிச் சிறுமியின் மயிர்க் கூச்செறியும் சாகசம்…!! வீடியோ