சிங்கப்பூரில் மேலும் 26 பேருக்கு ஜிகா: மொத்த எண்ணி்கை 215-ஐ தாண்டியது…!!

Read Time:2 Minute, 50 Second

தென்அமெரிக்கா நாடான பிரேசிலை முதன்முதலாக ஜிகா வைரஸ் தாக்கியது. குறிப்பாக ஜிகா வைரஸால் பாதிக்கப்படும் கர்ப்பிண பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள் குறைபாடுள்ளதாக இருக்கும் என கண்டறியப்பட்டது. இதனால் இந்த வைரஸை கொடூர உயிர்க்கொல்லி வைரஸ் என்ற அழைத்தனர்.

பிரேசிலில் இருந்து தென்அமெரிக்கா முழுவதும் இந்த வைரஸ் பரவி பெரிய அச்சத்தை ஏற்படுத்தியது. தற்போது அங்கு நிலைமை சரியாகி வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சிங்கப்பூரில் 40-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள சுதாகரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. முக்கியமாக அல்ஜூனைத் கிரெசென்ட்/சிம்ஸ் டிரைவ் பகுதியில் இருப்பவர்கள்தான் பாதிக்கப்பட்டனர் என்று கூறியது.

இந்நிலையில் மேலும் 26 பேர் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ‘‘நாங்கள் ஆராய்ந்து பார்த்ததில் இந்த வைரஸ் ஆசியப் பகுதியில் உள்ளதுதான். தென்அமெரிக்காவில் இருந்து வந்தவர்கள் மூலம் இந்த வைரஸ் சிங்கப்பூரில் பரவில்லை’’ என்று அறிவித்துள்ளது.

தற்போதைய 26 பேரை சேர்த்து ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 215 ஐ தாண்டியது.

நேற்று மலேசிய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘ஜிகா வைரஸ் மலேசியாவில் காலெடுத்து வைத்துள்ளது. இங்குள்ள சபாஹ் மாநிலத்தில் வசித்து வரும் 61 வயதான ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது’’ என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தன்னை ஏமாற்றிய காதலனை, ஃபேஸ்புக் லைவ்-ல் வைத்து மானத்தை வாங்கிய காதலி…!! வீடியோ
Next post அமெரிக்காவின் ஒக்லஹாமா மாநிலத்தில் பயங்கர நிலநடுக்கம்…!!