அமெரிக்காவின் ஒக்லஹாமா மாநிலத்தில் பயங்கர நிலநடுக்கம்…!!

Read Time:2 Minute, 11 Second

201609041138231614_Oklahoma-rocked-by-one-of-its-strongest-earthquakes_SECVPFமத்திய மேற்கு அமெரிக்காவில் உள்ள ஒக்லஹோமா மாநிலத்தில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

மத்திய மேற்கு அமெரிக்காவில் உள்ள ஒக்லஹோமா மாநிலத்தில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. மாநிலத்தின் வடமத்திய பகுதியில் உள்ள பாவ்னி என்ற இடத்தின் அருகே உள்ளூர் நேரப்படி இன்று காலை 7 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 அலகுகளாக பதிவாகியுள்ளது.

இன்றைய நிலநடுக்கத்தின் தாக்கம் அருகாமையில் உள்ள டெக்சாஸ், தெற்கு டக்கோட்டா, விஸ்கான்சின் உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டது. பாவ்னி பகுதி முழுவதும் அவசரநிலை பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது.

ஒக்லஹோமா மாநிலத்தில் எண்ணெய் கிணறுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் இப்பகுதியில் உள்ள நிலபரப்பை பாதித்துள்ளதால் நிலநடுக்கத்தை அடுத்து இங்குள்ள கழிவுநீர் அகற்றும் 35 பாதாள கிணறுகள் உடனடியாக மூடப்பட்டன.

சுமார் ஒருநிமிடம் நீடித்த இன்றைய நிலநடுக்கத்தால் பாவ்னி பகுதியில் உள்ள பழைமையான ஒரு வங்கி கட்டிடம் இடிந்து விழுந்ததாக தெரியவந்துள்ளது. சேத விபரம் தொடர்பான உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிங்கப்பூரில் மேலும் 26 பேருக்கு ஜிகா: மொத்த எண்ணி்கை 215-ஐ தாண்டியது…!!
Next post சீனாவில் உள்ள நீளமான கண்ணாடி பாலம் மூடப்பட்டது: பார்வையாளர்கள் ஏமாற்றம்…!!