ஒபாமாவை தனிப்பட்ட முறையில் திட்டியதற்கு வருத்தம் தெரிவித்த பிலிப்பைன்ஸ் அதிபர்…!!

Read Time:2 Minute, 28 Second

201609061631295274_Philippines-President-Duterte-regrets-abusive-remark-about_SECVPFஅமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோடிரிகோ டுட்டர்டே-வை அமெரிக்காவின் லாவோஸ் நகரில் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சந்திப்பின்போது, பிலிப்பைன்ஸ் நாட்டில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் விவகாரத்தில் நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ரோட்ரிகோ டுட்டர்டேவிடம் ஒபாமா கேள்வி எழுப்புவார் என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் குறிப்பிட்டிருந்தனர்.

இதுதொடர்பாக நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே, ஒபாமாவை தனிப்பட்ட முறையில் தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்தார். இதையடுத்து ஒபாமா-டோட்ரிகோ சந்திப்பும் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், ஒபாமாவை தாக்கி பேசியதற்காக ரோட்ரிகோ டுட்டர்டோ வருத்தம் தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளார். ‘நிருபர் எழுப்பிய குறிப்பிட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தது கவலையை ஏற்படுத்துகிறது. இதற்காக நாங்கள் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம்’ என்று டுட்டர்டோ கூறியுள்ளார்.

மேலும், இரு தரப்பு ஒப்புதலின்பேரில் ஒபாமாவுடனான சந்திப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் டுட்டர்டே தெரிவித்துள்ளார்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்காவில் வாலிபர் மூளையில் சொருகி இருந்த 9 செ.மீ. நீள குச்சி ஆபரே‌ஷன் மூலம் அகற்றம்…!!
Next post 9 கிலோ நகையுடன் ஓட்டம்: நகை கடை ஊழியரின் நண்பர்கள் 5 பேரிடம் விசாரணை…!!