By 8 August 2006

பிரான்ஸில் ஐனநாயகத்திற்கு ஆதரவான அமைப்பு எனும் பெயரில் நடந்த கூத்து…

FranceFlags.gifநேற்றையதினம் மாலை பிரான்ஸ் சார்ஷல் எனுமிடத்தில் ஐனநாயகத்திற்கு ஆதரவான கலந்துரையாடல் எனும் பெயரில் மாற்று அமைப்புக்கள் என்று கூறிக்கொள்ளும் சுமார் 20பேர் அடங்கிய கூட்டமொன்று நடைபெற்றுள்ளது. இதில் புலிகளுக்கெதிரான கருத்துக்களை விட ஈபிடிபி அமைப்புக்கெதிரான கருத்துக்களே பரவலாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது..

இலங்கையில் எந்தவொரு தளமுமின்றி இந்தியாவில் அஞ்ஞாதவாசம் செய்து கொண்டும் தற்போது கருணாஅம்மானின் முதுகில் சவாரி செய்து கொண்டு இருக்கும் அமைப்பைச் சேர்ந்தவர்களும், தமது தலைவரையே வன்னித்தலைவரின் காலடியில் சரணாகதியடைய வைத்து விட்டு தற்போது அமைப்பே இல்லாமல் இருப்பவர்களும் ஒன்று சேர்ந்தே இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்களாம்.

தமது தலைவரையே வன்னித்தலைவரின் காலடியில் சரணாகதியடைய வைத்து விட்டு தற்போது அமைப்பே இல்லாமல் இருப்பவர்களில் ஒருவர் (வன்னித்லைவரின் பெயரைக் கொண்டவர்) சுவிஸிலிருந்து சென்று தமது பிரான்ஸ் சகாவுடன் (இராமரின் உடன் பிறவாத்தம்பியின் பெயரைக் கொண்டவர்) இணைந்து மேற்படி கூட்டத்தை பெண்மணியின் தலைமையில் ஏற்பாடு செய்திருந்தார்களாம்.

இதில் தளத்தில் இருந்து நீண்டகாலமாக செயல்படும் இருஅமைப்புக்களைச் சோந்தவர்களும் (கழகத்தினரும், நாபாஅணியினரும்) கலந்து கொண்டுள்ளனர். ஆனால் இவர்கள் பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்ற ரீதியில் மௌனிகளாக இருந்து வேடிக்கை பார்த்துள்ளார்களாம்.

மேற்படிக் கூட்டத்தில் நிதிசேகரிப்பது குறித்தும், லண்டனில் இருந்து செயல்படும் தமது அமைப்பின் வானெலிக்கு ஆதரவு செலுத்துவது குறித்துமே பேசப்பட்டதெனவும் அறியப்படுகின்றது. இதேவேளை இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமகன் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில் ‘புலிகள் பலவீனமடையும் போது அந்த இடத்தை நிரப்பக் கூடிய பலமும் தலைமையும் ஈபிடிபி அமைப்பின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்குத் தான் உண்டெனத்” தெரிவித்ததையடுத்தே ஈபிடிபி அமைப்புக்கெதிரான கருத்துக்கள் கடுமையான முறையில் பரவலாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது..

இலங்கையில் எந்தவொரு தளமுமின்றி இந்தியாவில் அஞ்ஞாதவாசம் செய்து கொண்டும் தற்போது கருணாஅம்மானின் முதுகில் சவாரி செய்து கொண்டு இருக்கும் அமைப்பின் சர்வதேச அமைப்பாளாரெனக் கூறிக்கொள்ளும் பெண்மணியொருவரின் தலைமையில் (அமைப்பே இல்லாதவர்களுக்கு சர்வதேச அமைப்பாளர்) நடந்த இந்தக்கூட்டத்தில் ஐனநாயகத்திற்கு ஆதரவான கருத்துக்களை விட ஈபிடிபிக்கெதிரான கருத்துக்களை முன்வைப்பதிலேயே ஆர்வம் காட்டினார்களாம். வன்னித்தலைவர் பிரபாகரன் அழிக்கப்பட்டால் அவரது இடத்தை டக்ளஸ் தேவானந்தா தான் நிரப்புவாரெனவும் ஏனெனில் பிரபாகரனைப் போல் டக்ளஸ் தேவானந்தாவும் ஓர் அராஐகவாதி தானெனவும் தெரிவித்துள்ளனர்.

மக்களோடு மக்களாக இருந்து மக்களுக்காக செயல்படும் ஈபிடிபி அமைப்பின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் குறித்து கதைப்பதற்கே தகுதியில்லாத இவர்கள் இந்தியப்படை காலகட்டத்தில் “திறீ ஸ்ரார்” எனும் பெயரில் புரிந்த அராஐகத்தை மறந்து விட்டார்களா??

குறுகிய காலகட்டத்திலேயே அராஐகத்தின் உச்சக்கட்டத்தை எட்டி யாழ்ப்பாணம் கிளிநொச்சி மட்டக்களப்பு திருமலை போன்ற பகுதிகளில் மக்களுக்கு எவ்வளவு கொடுமைகள் செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் செய்து விட்டு இந்தியஇராணுவம் இலங்கையை விட்டு வெளியேறும் போது படுத்த பாய்க்குக்கு கூட சொல்லாமல் தமது சொகுசு வாகனங்களை விற்றுவிட்டு ஓடியவர்கள் இன்று மக்களிடம் துளிகூட மரியாதை பெறமுடியாமல் செல்லாக்காசாகி விட்ட இவர்கள் இன்னும் சில செல்லாக்காசுகளுடன் இணைந்து தமது (பழைய) வியாபார நோக்கத்திற்காக தமிழர்களை நினைத்து நீலிக்கண்ணீர் வடிக்கின்றார்கள்.

பணம் அனைத்தும் இவர்களது வாயில்.. இலங்கைத் தமிழர்களுக்கோ நாமம்…. தகவல்:- இலக்கு இணையத்தளம்… (www.ilakku.com)

இலக்கு இணையத்தளத்தின் நிர்வாகத்தினால் கேட்கப்பட்டதற்கிணங்க இத்தகவலை நாம் பிரசுரித்துள்ளோம். இத்தகவலுக்கும் நிதர்சனம்.நெற் இணையத்தளத்திற்கும் எதுவித சம்பந்தமுமில்லை. இத்தகவலுக்கு பதிலோ அன்றில் மறுப்பறிக்கையோ சம்பந்தப்பட்ட அமைப்புக்களால் அனுப்பப்பட்டால் அதனையும் நிதர்சனம்.நெற் நிர்வாகம் பிரசுரிக்கும்.
அனுப்ப வேண்டிய முகவரி:- [email protected]Comments are closed.