யாழில் புதிய பொலிஸ் கட்டடம் ஜனாதிபதியால் கோலாகலமாக திறந்து வைப்பு..!!

Read Time:2 Minute, 11 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90யாழ்ப்பாண நகரில் பல மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பொலிஸ் நிலையக் கட்டடத்தொகுதி இன்று ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் உத்தியோகபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

யாழ். பொலிஸ் நிலையம் இதுவரை காலமும் தனியார் காணி ஒன்றில் தற்காலிகமாக இயங்கி வந்த நிலையில் அரசாங்கத்திற்குச் சொந்தமான காணியில் புதிய கட்டடம் இன்று நவீனமயமான முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொடர்பாடல் பிரிவு, சிவில் நிர்வாக பிரிவு, பொலிஸ் மா அதிபரின் அலுவலகம், மாவட்ட நிர்வாக பிரிவு, பிரதேச பிரிவுகள் என்பன உள்ளடங்களாக 12 பிரிவுத் தொகுதிகளும் புதிய கட்டடத்தில் இயங்கவுள்ளது.

குறித்த நிகழ்வில் அமைச்சர் சாகல ரட்நாயக்க, இராஜாங்க அமைச்சர்களான விஐயகலா மகேஸ்வரன், இராதாகிருஸ்ணன், வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா, ஈ.சரவணவன், த.சித்தார்த்தன், அங்கஐன் இராமநாதன், மற்றும் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓதுவீராக…!!
Next post விடுதியில் தங்கியிருந்த நபர் மாயம்…!!