சுட்ட மீன் சாப்பிடாதவரா நீங்கள்?… இதை படித்த பின்னர் விரும்பி சாப்பிடுவீங்க…!!

Read Time:2 Minute, 53 Second

fish_cook_002-w540மீனில் உள்ள, ‘ஒமேகா-3’ என்ற அமிலமானது, நம் உடலுக்கு பலவிதமான நன்மைகளை தர வல்லது என, பலர் அறிந்திருப்பர்.மூளைக்கு தேவையான அத்தனை பலன்களுக்கும் ஒமேகா அமிலம் சிறந்தது.

ஆனால், அதை விட சிறப்பான தகவல் ஒன்றை, தற்போது, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அது யாதெனில், வாரம் ஒரு முறை சுட்ட மீன் சாப்பிட்டால், அது மூளைக்கு மிக மிக நல்லது.

அது, திறம்பட செயல்பட உதவும் என்பதே. சுட்ட மீனில், ‘ஒமேகா-3’ அமிலம் இருந்தாலும், அதனால், பிரச்னை ஏற்படாது என்றும், ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஒவ்வொரு வாரமும், சுட்ட மீன் சாப்பிடும் போது, வாழ்க்கையின் பிற்பகுதியில், நினைவுச் சிதைவு பாதிப்பு ஏற்படுவது தவிர்க்கப்படும்.

சுகாதாரத் துறையினர் எடுத்த கணக்கெடுப்புப்படி பார்த்தால், வரும், 2040ம் ஆண்டில், எட்டு கோடி பேர், நினைவுச் சிதைவு நோயால் பாதிக்கப்படலாம்; 52 லட்சம் பேர், நினைவுத் திறன் இழப்பு நோயால் பாதிக்கப்படலாம் என, மதிப்பிடப்பட்டுள்ளது.

மீனில் உள்ள, ‘ஒமேகா-3’ அமிலத்தால், நோய் எதிர்ப்பு சக்தி கூடி, மூளை பலம் அடையலாம் என, முந்தைய ஆய்வுகளிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, சுட்ட மீன் சாப்பிடுவதன் மூலம், இந்த மகத்துவம் மேலும் அதிகரிக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

‘நாங்கள் சைவர்கள் ஆச்சே, நாங்கள் எப்படி சுட்ட மீன் சாப்பிட முடியும்’ என, சில தரப்பினர் கேட்கலாம். மீனில் உள்ள ஒமேகா -3 அமிலச் சத்து போல, சில வகை விதைகள், பருப்புகள், சில வகை எண்ணெய்களிலும், இந்தச் சத்து உள்ளது. அதைச் சாப்பிட்டால், சைவர்களுக்கு, சுட்ட மீன் சாப்பிட்டதன் பலன் கிடைத்து விடும்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெளியில் சொல்ல வேண்டும்…!!
Next post போதையில் வாகனம் செலுத்திய 10 பேர் தருமபுரத்தில் வசமாக சிக்கினர்…!!