சேலத்தில் திருமணமான 7 மாதத்தில் பெண் அதிகாரி மர்ம சாவு: போலீசார் விசாரணை…!!

Read Time:4 Minute, 55 Second

201609121547178180_woman-officer-myster-dead-police-investigation-in-salem_secvpfசேலம் அம்மாப்பேட்டை சவுண்டம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் அஸ்ரப்அலி(வயது 32). இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயரராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கும் பல்கீஸ்(வயது 27) என்பவருக்கும் கடந்த 7மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. பல்கீஸ் சேலம் சேகோ சர்வ் நிறுவனத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

நேற்று பகலில் பல்கீசுக்கு திடீரென உடல் நிலை பாதித்தது. பின்னர் அவர் வாந்தி எடுத்தார். இதை அறிந்த அவரது மாமனார், மாமியார் அவருக்கு மாத்திரை கொடுத்தனர். ஆனால் அப்போதும் அவருக்கு உடல் நிலை சரியாகவில்லை. பிறகு பல்கீசை தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு பல்கீசை பரிசோதனை செய்த டாக்டர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை அழைத்து செல்ல கூறினர்.

அதன்படி அவரை அழைத்து வந்தனர். ஆனால் வரும் வழியில் பல்கீஸ் இறந்து விட்டார். இதனால் பல்கீசின் மாமனார், மாமியார் அதிர்ச்சி அடைந்தனர். பல்கீஸ் இறந்ததை அறிந்த அவரது பெற்றோர் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து பல்கீசின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

திருமணம் ஆன 7மாதத்தில் பல்கீஸ் இறந்ததால் சேலம் உதவி கலெக்டர் விஜய்பாபு விசாரித்து வருகிறார். சேலம் அஸ்தம்பட்டி உதவி கமி‌ஷனர் குணசேகரனும் விசாரித்து வருகிறார்.

இந்த நிலையில் பல்கீசின் பெற்றோர் போலீசாரிடம் திருமணத்தின் போது பல்கீசுக்கு 40பவுன் தங்க நகையும், மோட்டார் சைக்கிளும், மாப்பிள்ளைக்கு 10 பவுன் தங்க நகையும் வாங்கி கொடுத்தோம். பல்கீசின் சம்பள பணத்தையும் வாங்கி கொண்டு அவரை கொடுமைப்படுத்தி வந்துள்ளனர் என சேலம் அம்மாப்பேட்டை போலீசாரிடம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் பல்கீசின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இன்று காலை சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு திரளாக வந்தனர். பின்னர் அவர்கள் அதிகாரிகளிடம் புகார் செய்தனர்.

அப்போது அவர்கள் கண்ணீர் மல்க கூறியதாவது:-

பல்கீசின் தந்தை சேக் தாவூத் சேலம் சேகோ சர்வில் வேலை பார்த்து வந்தார். பின்னர் அவர் இறந்து விட்டார். இவரது வேலை அவரது மகள் பல்கீசுக்கு கிடைத்தது. பல்கீஸ் நல்ல சம்பளம் வாங்கி வந்தார். இந்த பணத்தை அவரது கணவரும், அவரது வீட்டாரும் பறித்து பல்கீசை கொடுமைப்படுத்தி வந்தனர். சில நாட்களுக்கு முன்பு பல்கீசை கொடுமைப்படுத்தி அவரது கழுத்தை நெரித்து உள்ளனர்.

இதுபற்றி அவர் எங்களிடம் தெரிவித்து இருந்தார். பல்கீஸ் செல்போனில் அடிக்கடி பேசி தன்னை கொடுமைப்படுத்தி டார்ச்சர் செய்து வருகிறார்கள், என்னை காப்பாற்றுங்கள் என தெரிவித்து வந்தார். கணவர் வீட்டில் தகராறு வேண்டாம், பொறுமையாக இருந்து குடும்பம் நடத்து என நாங்கள் தெரிவித்து வந்தோம். இந்த நிலையில் அவர் மர்மமாக இறந்து உள்ளார். வாந்தி எடுத்த பல்கீசுக்கு அவரது மாமனார் மாத்திரை கொடுத்து உள்ளார். இதனால் தான் பல்கீஸ் இறந்துள்ளார். அவரது சாவிற்கு காரணமான மாமனார், மாமியார், நாத்தனார் மற்றும் அவர்களது உறவினர்களை போலீசார் உடனே கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கண்ணீர் மல்க கூறினர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொடுமுடியில் கோவிலுக்கு வந்தவர் சுருண்டு விழுந்து பலி…!!
Next post டிரைவரை அழைத்துச் சென்ற பெண்ணுக்கு ஓட்டலில் சாப்பிட அனுமதி மறுப்பு…!!