கொழும்பில் குண்டுவெடிப்பு: 3பேர் பலி- ஈ.பி.டி.பி. முன்னாள் நா.உ. உட்பட 4 பேர் படுகாயம்

Read Time:1 Minute, 32 Second

epdp-FLAG3[1]-.JPGகொழும்பு பம்பலப்பிட்டியில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஈ.பி.டி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சங்கரப்பிள்ளை சிவதாசன் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர். பம்பலப்பிட்டி டிக்மன் வீதியில் உள்ள அம்ரித் உணவகத்துக்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.45 மணியளவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சிவதாசன் தனது வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது இக்குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்தது.

சம்பவ இடத்திலேயே 3பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சிவதாசன் உட்பட நால்வர் கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிவதாசன் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் பயணம் செய்த வாகனம் முற்றாக தீப்பற்றி எரிந்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

epdp-FLAG3[1]-.JPG

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post டெஸ்ட் கிரிக்கெட்டில் முரளீதரன் சாதனை
Next post இன்னும் சில வாரங்களில் பணிக்குத் திரும்புவார் ஃபிடல் காஸ்ட்ரோ