இன்னும் சில வாரங்களில் பணிக்குத் திரும்புவார் ஃபிடல் காஸ்ட்ரோ

Read Time:1 Minute, 13 Second

castro_0.jpgகியூப அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ உடல் நலம் தேறி வருகிறார், குடலில் ஏற்பட்ட ரத்தக் கசிவுக்காக அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது; இன்னும் சில வாரங்களில் அவர் பணிக்குத் திரும்பிவிடுவார் என்று துணை அதிபர் கார்லோஸ் லாகி தெரிவிக்கிறார்.

பொலீவியா நாட்டின் சுக்ரே என்ற நகருக்கு திங்கள்கிழமை வந்த அவர் இத் தகவலைத் தெரிவித்தார். வரும் 13-ம் தேதி காஸ்ட்ரோவுக்கு 80-வது பிறந்த நாள் வருகிறது. இன்னும் 80 ஆண்டுகள் அவர் உயிரோடு இருப்பார் என்று கார்லோஸ் லாகி தெரிவித்தார்.

காஸ்ட்ரோ திரும்பிவரமாட்டார், அவருக்கு வயிற்றில் புற்றுநோய் என்று அமெரிக்கா செய்துவரும் பிரசாரம் உண்மை அல்ல என்று இதன் மூலம் நிரூபணமாகிவிடும் என்றும் குறிப்பிட்டார் கார்லோஸ் லாகி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கொழும்பில் குண்டுவெடிப்பு: 3பேர் பலி- ஈ.பி.டி.பி. முன்னாள் நா.உ. உட்பட 4 பேர் படுகாயம்
Next post ஹமாஸ் தலைவர்கள் தொடர்ந்து கைது