இலங்கையில் சாதனை படைத்த ஜனாதிபதி மைத்திரி…!!

Read Time:3 Minute, 22 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-1உலகளாவிய ரீதியில் சமூக வலைத்தளங்களில் அரசியல்வாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கை ரீதியில் பேஸ்புக் வலைத்தளத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆதிக்கம் தீவிரம் பெற்றுள்ளது.

இதுவரையான காலப்பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 11 ஆயிரம் விரும்பங்களை (like) தாண்டியுள்ளார்.

அதற்கமைய 11 இலட்ச விருப்பங்களை கடந்த இலங்கையின் முதலாவது அரசியல் கதாபாத்திரமாக ஜனாதிபதி இணையம் ரீதியாக சாதனை படைத்துள்ளார்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் நேற்றையதினமான 14ம் திகதி வரையிலான காலப்பகுதியில் 1,100,133 விரும்பங்கள் பதிவாகியுள்ளன.

கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதியின் பேஸ்புக் பக்கத்தின் விரும்பங்கள் மில்லியனை கடந்திருந்தன. அதனை கடந்த முதலாவது அரசியல்வாதி கதாபாத்திரம் ஜனாதிபதியாகும்.

ஜனாதிபதியின் பேஸ்புக் பக்கம் கடந்த இரண்டு வருடங்களும் இரண்டு மாதங்களுக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 65வது ஆண்டு விழாவிற்கு பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பேஸ்புக் விருப்பங்கள் 200 வீதத்தில் அதிகரித்துளள்ளது.

இதற்கமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முதலாம் இடத்தை பிடித்துள்ள சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

நேற்று வரையில் மஹிந்தவின் பேஸ்புக் விருப்பங்கள் 1,068,640 ஆக பாதிவாகியிருந்தன. அதற்கமைய தற்போது வரையில் மஹிந்த, ஜனாதிபதி மைத்திரியை விடவும் 31 ஆயிரம் விருப்பங்கள் பின்னடைவில் உள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பேஸ்புக் பக்கம் ஆரம்பிக்கப்பட்டு 7 வருடங்கள் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக் விருப்பங்களுக்கமைய மூன்றாவது இடத்தை பெற்ற இலங்கை அரசியல் கதாபத்திரமாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மாறியுள்ளார்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பேருந்திற்கு முன்னால் படுத்து மக்கள் ஆர்ப்பாட்டம்: வவுனியாவில் பதற்றம்…!!
Next post கைதி தப்பியோட்டம்: பொலிஸார் நால்வர் பணிநீக்கம்…!!