சொர்க்கத்தில் இருக்கும் தாத்தாவுக்கு கடிதம் அனுப்பிய பேரன்…!!

Read Time:3 Minute, 37 Second

0246-300x247ஜெர்மனியில் உள்ள ரஹ்னிலெண்டு பிளாடினேட் என்ற மாகாணத்தில் பெற்றோருடன் 5 வயது சிறுவன் வசித்து வருகிறான்.சில வாரங்களுக்கு முன்னர் சிறுவனின் தாத்தா உயிரிழந்துள்ளார். இந்த பிரிவை சிறுவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளான். அதில், ‘அன்புள்ள தாத்தா, உங்களது இழப்பை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சொர்க்கத்தில் நீங்கள் நலமாக இருக்கறீர்களா? அங்குள்ள மற்றவர்கள் உங்களை கவனிப்பாக பார்த்துக்கொள்கிறார்களா?’ என உருக்கமுடன் எழுதியுள்ளான்.

பின்னர், வீட்டிற்கு வெளியே வந்த சிறுவன் அந்த கடிதத்தை ஒரு பலூனில் கட்டி வானில் பறக்க விட்டுள்ளான்.நீண்ட உயரம் பறந்த அந்த பலூன் கடைசியில் மறைந்து போய் விடுகிறது.

இந்நிலையில், நேற்று காலை வீட்டிற்கு வெளியே உள்ள கடிதங்களை வைக்கும் பெட்டியை சிறுவனின் பெற்றோர் பரிசோதனை செய்து பார்த்து ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.

அதில், ஒரு கடிதமும், ஒரு கரடி பொம்மையும் இருந்துள்ளது.

கடிதத்தில், ‘அன்புள்ள பேரனே, நான் இங்கு சொர்க்கத்தில் நலமாக இருக்கிறேன். நீ பலூனில் அனுப்பிய கடிதம் எனக்கு கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி. ஆனால், உன்னை பிரிந்த இழப்பை என்னாலும் தாங்க முடியவில்லை.

என்னை பற்றி இனி கவலைப்பட வேண்டும். நன்றாக படிக்க வேண்டும். கரடி பொம்மை உன்னிடம் இருக்கும்போது எல்லாம் நான் உன்னிடம் இருப்பது போல் உனக்கு இருக்கும். மிஸ் யூ’ என உருக்கமான பதில் கடிதம் எழுதப்பட்டிருந்தது.

இது குறித்து சிறுவனின் தாயார் பேசியபோது, ‘கடிதத்தை பார்த்து அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்தோம். பலூனை பார்த்துவிட்டு எனது மகனின் ஏக்கத்தை தீர்த்து வைக்க யாரோ ஒரு நபர் இந்த கடிதத்தையும் பரிசையும் அனுப்பி வைத்துள்ளார்.

ஆனால், அந்த கடிதத்தில் அனுப்புனர் முகவரி எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனினும், எனது மகனின் பாசத்திற்கு பதில் அனுப்பிய அந்த முகம் தெரியாத நபருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிகிச்சை மூலம் செயற்கை மார்பகம் செய்துக் கொண்ட நடிகைகள்…!!
Next post நேற்று வவுனியா வைத்தியசாலையில் ஓர் சம்பவம்…!!