இராக்கில் குண்டுவெடிப்பு: 39 பேர் சாவு

Read Time:1 Minute, 52 Second

irak.map.2.jpgஇராக் தலைநகர் பாக்தாதில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதல் உள்பட பல்வேறு குண்டுவெடிப்புகளில் 39 பேர் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் 10 பேர் போலீஸôர். பாக்தாதின் வடக்குப் பகுதியில் உள்ள மாகாணத் தலைமை காவல் நிலையத்தின் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடந்தது. வெடிகுண்டு நிரப்பிய ஒரு லாரியை, போலீஸ் தலைமையகத்தின் மீது மோதி, அக் கட்டடத்தை தகர்த்தனர். இதில், 10 போலீஸôர் உயிரிழந்தனர்; 18 பேர் காயமடைந்தனர்.

பாக்தாதில் ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மைப் பகுதியில் திங்கள்கிழமை இராக் மற்றும் அமெரிக்கப் படைகள் கூட்டாகத் தாக்குதல் நடத்தின. இத்தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர்.

இந்தத் தாக்குதலை, இராக் பிரதமர் நெüரி அல்-மாலிகி வன்மையாகக் கண்டித்துள்ளார். இதுபோன்ற சம்பவம் இனிமேல் நிகழாமல் பார்த்துக்கொள்வேன் என்று கூறிய அவர், நடந்து முடிந்த தாக்குதலுக்காக வருத்தம் தெரிவித்தார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.61 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

மேலும், மத்திய பாக்தாத் மற்றும் நாஹ்தா பகுதிகளில் நடந்த பல்வேறு சாலையோர குண்டுவெடிப்புகளில் 9 பேர் கொல்லப்பட்டனர். 3 போலீஸôர் உள்பட 11 பேர் காயமடைந்தனர்.

irak.map.2.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஹமாஸ் தலைவர்கள் தொடர்ந்து கைது
Next post கடைசி டெஸ்ட் கிரிக்கெட்: ஜெயவர்த்தனேயின் சதத்தால் இலங்கை மீண்டும் வெற்றி