ஐ.நா வில் உலகத் தலைவர்களை சந்திக்கவுள்ள ஜனாதிபதி..!!

Read Time:2 Minute, 27 Second

stephane_dionஐ.நா வில் உரையாற்றவுள்ள ஜனாதிபதி உலகத் தலைவர்களையும் சந்திக்க ஏற்பாடு-

29 பேர் காயமடையக் காரணமான குண்டுத்தாக்குதலால் நியூயோர்க் நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நியூயோர்க் ஜோன் கெனடி விமானநிலையத்தை நேற்று மாலை சென்றடைந்துள்ளார்.

ஜனாதிபதி செப்டெம்பர் 21ஆம் திகதி மாலை ஐநாவின் பொதுச்சபையில் உரையாற்றவுள்ளார். அதேவேளை எதிர்வரும் 20ஆம் திகதி ஐநாவின் தலைமையகத்தில் இடம்பெறவுள்ள முக்கிய நிகழ்வொன்றிலும் உரையாற்றவுள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி அவுஸ்திரேலியாவின் பிரதமர் Malcolm Turnbull, ஐநாவின் பொதுச் செயலாளர் பான் கீ மூன், அமெரிக்காவின் அரசின் இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி, இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் M J Akbar, நேபாள பிரதமர் புஷ்பா கமல் டஹால், உலக பொருளாதார அமையத்தின் தலைவர் பேராசிரியர் Klaus Schwab மற்றும் Millennium Challenge Corporation தலைவர் Dana J Hyde உள்ளிட்ட தலைவர்களுடன் சர்வதேச பிரச்சனைகள் தொடர்பாக இருதரப்பு பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவுள்ளார்.

அதேவேளை அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவினால் உலகத் தலைவர்களுக்காக ஒழுங்கு செய்யப்படும் விசேட நிகழ்வு மற்றும் ஐநா பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் ஏற்பாடு செய்யப்படும் மதிய போசன நிகழ்விலும் ஜனாதிபதி உலகத் தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளார்.

ஐநா அலுவலம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளின் பாதுகாப்பானது நேற்று இடம்பெற்ற குண்டுத்தாக்குதலைத் தொடர்ந்து பலப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா மற்றும் பல தலைவர்கள் இன்று நியூயோர்க் நகருக்கு வருகை தரவுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது..!!
Next post அந்தரங்கள் பேசும் அன்பு மொழி முத்தம்…!!