அமெரிக்காவில் வீட்டின் மீது விழுந்து நொறுங்கிய குட்டி விமானம்..!!

Read Time:1 Minute, 48 Second

201609191013300765_small-plane-crash-lands-on-a-house-in-us_secvpfஅமெரிக்காவில் வீட்டின் மீது விழுந்து குட்டி விமானம் நொறுங்கியது. அதில் விமானி உள்பட 6 பேர் உயிர் தப்பினர்.

அமெரிக்காவின் அரிசோனாவில் இருந்து ஒரு குட்டி விமானம் புறப்பட்டு பறந்து சென்றது. அதில் விமானியும், 4 பாராசூட் வீரர்களும் இருந்தனர். அவர்கள் அமெரிக்க அரசியலமைப்பு சட்ட ஆண்டு விழாவை யொட்டி நடைபெறும் விழாவில் பங்கேற்க புறப்பட்டு சென்றனர். அந்த விமானம் போனிஸ் நகரின் மீது பறந்த போது ஒரு வீட்டின் மீது விழுந்து நெறுங்கியது. இதனால் அப்பகுதியில் தீப்பிடித்து எரிந்தது.

தகவல் அறிந்ததும் கில்பர்ட் பகுதியில் இருந்து தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த விபத்தில் விமானிக்கு கடும் தீக்காயம் ஏற்பட்டது.

அவர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மேலும் விமானத்தில் பயணம் செய்த பாராசூட் வீரர்கள் 4 பேரும் விமானத்தில் இருந்து குதித்து உயிர் தப்பினர்.

விமானம் விழுந்து நெறுங்கியதில் வீடு இடிந்தது. அதில் 2 பேர் இருந்தனர். அவர்கள் இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்தனர். அவர்களும் உயிருடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்கள் ஸ்லிம்மாக அழகாக இருப்பது எப்படி..!!!
Next post கள்ளக்காதலி வேறொருவருடன் ஓடியதால் தொழிலாளி தற்கொலை..!!