அரசு ஆஸ்பத்திரியில் மின்வெட்டு: 3 குழந்தைகள் பலி..!!

Read Time:1 Minute, 50 Second

big_bc00bceddfeb1fd5727afec40a542e53போபால் அரசு ஆஸ்பத்திரியில் மின்வெட்டால் 3 குழந்தைகள் பலியானது.

மத்திய பிரதேச மாநிலம் பாலாகாட் மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரி பிரசவ வார்டில் எடை குறைவாக பிறந்த குழந்தைகள் இன்கு பேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு திடீர் என்று ஆஸ்பத்திரியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நீண்ட நேரம் ஆகியும் மின்சாரம் வரவில்லை. இதனால் இன்குபேட்டரில் இருந்த 3 குழந்தைகள் மூச்சு திணறி இறந்தன. இதை அறிந்த பெற்றோர் பதறி துடித்தனர்.

இந்த ஆஸ்பத்திரியில் மின்வெட்டு காலங்களில் பயன்படுத்துவதற்காக ஜெனரேட்டர் வசதி உள்ளது. ஆனால் அன்றைய தினம் மின்வெட்டு ஏற்பட்ட போது ஜெனரேட்டர் பயன் படுத்தப்படாதது ஏன் என்ற கேள்வி எழுந்தது.

இதையடுத்து இது பற்றி விசாரணை நடத்த மாவட்ட கலெக்டர் உத்தர விட்டுள்ளார். ஆஸ்பத்திரி ஊழியர்களின் அலட்சியப்போக்கால் தான் 3 குழந்தைகளும் உயிர் இழந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டி உள்ளனர்.

3 குழந்தைகள் பலியான இந்த ஆஸ்பத்திரிக்குதான் மாநிலத்திலேயே சிறந்த மகப்பேறு மருத்துவமனை என்ற விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாதுகாப்பை கோரி மடக்கும்புற தோட்ட மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்..!!
Next post பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் இருவரின் வாகனங்கள் மோதிக் கொண்டதில் சேதம்..!!