கணவரிடமிருந்து தப்பிச்சென்ற, யுக்ரைனிய முன்னாள் அழகுராணி அமெரிக்காவில்..!!

Read Time:3 Minute, 44 Second

dsddஇத்தாலிய கோடீஸ்வர கணவரிடமிருந்து தப்பிச்சென்ற யுக்ரைனிய முன்னாள் அழகுராணி-

யுக்ரைனிய முன்னாள் அழகுராணி ஒருவர் காணாமல் போனதாகக் கூறப்பட்ட நிலையில், தான் அமெரிக்காவில் உள்ளதாக தெரிவி த்துள்ளார்.

அனா ஸெயாச்கிவ்ஸ்கா எனும் இந்த யுவதி 2013 ஆம் ஆண்டு மிஸ் யுக்ரைன் அழகுராணி போட்டியில் முதலிடம் பெற்று மிஸ் வேர்ல்ட் யுக்ரைன் 2013 அழகுராணியாக தெரிவானவர்.

அவ் வருடம் இந்தோனேஷியாவில் நடைபெற்ற உலக அழகுராணி போட்டியில் யுக்ரைன் சார்பாக இவர் பங்குபற்றியிருந்தார்.

பின்னர் இத்தாலிய கோடீஸ் வரரான ஜியான்லுகா சேர்வேராவை அனா ஸெயாச்கிவ்ஸ்கா திருமணம் செய்தார்.

இவர்கள் இத்தாலியில் வசித்து வந்தனர். எனினும், இவர்களுக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டதால் கணவர் ஜியான்லுகாவிடமிருந்து அனா பிரிந்து சென்றார்.

இதையடுத்து தனது மனைவி அனா ஸெயாச்கிவ்ஸ்கா காணாமல் போய் விட்டார் என கடந்த ஜூலை மாதம் சேர்வேர ஜியான்லுகா முறைப்பாடு செய்திருந்தார்

அதன்பின், மற்றொரு ஆணுடன் அனா ஸெயாச்கிவ்ஸ்கா காணப்படும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருப்பதை சேர்வேரா அறிந்துகொண்டார்.

இதையடுத்து, அனாவுக்கு எதிராக ஜியாலுன்கா வழக்குத் தொடுத்தார். தன்னி டமிருந்து பிரிந்து சென்றதன் மூலம், திருமணத்துக்கு முன்னர் தம் இருவருக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை அனா மீறிவிட்டார் என இவ்வழக்கில் ஜியான்லுன்கா குற்றம் சுமத்தியிருந்தார்.

அனா – சேர்வேரா ஜியாலுன்கா 7000 அமெரிக்க டொலர்களையும் (10 இலட்சம் ரூபா) செல்லிடத் தொலை பேசியையும் அனா திருடிச் சென்றுவிட்டதாகவும் சேர்வேரா முறைப்பாடு செய்துள்ளர்.

‘புதிய காற்று வாங்குவதற்காக’ தான் செல்வதாக தன்னிடம் அனா கூறினார் எனவும் ஆனால், அவர் மீண்டும் திரும்பி வரவில்லை எனவும் இத்தாலி அதிகாரிகளிடம் 45 வயதான சேர்வேரா ஜியலுன்கா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தனது கணவர் ஜியாலுன்காவிடமிருந்து தான் தப்பி வந்து ள்ளதாக 24 வயதான அனா ஸெயாச்கிவ்ஸ்கா கூறியுள்ளார். நியூயோர்க் வீதிகளில் நடக்கும்போது தான் நிம்மதியை உணர்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

அனா ஸெயாச்கிவ்ஸ்கா காணாமல் போய்விட்டார் என சேர்வேரா செய்த முறைப்பாடு குறித்து அனா பரிகாசம் செய்துள்ளார். ‘நான் எங்கே இருக்கிறேன் என்பது அவருக்குத் தெரியும்’ என அனா தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் இருவரின் வாகனங்கள் மோதிக் கொண்டதில் சேதம்..!!
Next post ஓரின சேர்க்கைகள் காரணமாகவே டைனோசர்களின் இனம் அழிந்தது..!!