பிரான்ஸ் நாட்டு நிறுவனத்தின் தமிழ் சமூக சேவகர்கள் 17 பேரை கொன்றது யார்?

Read Time:3 Minute, 19 Second

action_fiam.jpgஇலங்கையில், பிரான்ஸ் நாட்டு நிறுவனத்தின் தமிழ் சமூக சேவகர்களை கொன்றது யார்? என்ற பிரச்சினையில் விடுதலைப்புலிகளும், ராணுவமும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டியுள்ளனர். 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலையால் இலங்கையில் பேரழிவு ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பிரான்ஸ் நிறுவனத்தின் தமிழ் சமூக சேவகர்கள் இலங்கையில் உள்ள திரிகோணமலை சென்றனர். அங்கு அவர்கள் மூதூர் என்ற இடத்தில் தங்கி நிவாரணப் பணிகளை செய்து வந்தனர்.

இவர்களில் 17 பேர்களை சிலர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். மரண தண்டனையை நிறைவேற்றுவதைப் போல இவர்களது தலை, குண்டுகளால் பிளக்கப்பட்டுள்ளது. இவர்களது உடல்கள் அவர்கள் அலுவலகத்தில் கிடந்தன.

கண்டனம்

இந்த கொடூர கொலை குறித்து சர்வதேச சேவை குழுவின் செயல் இயக்குனர் மிரிபெல் கூறுகையில்,”சிலர் ராக்கெட் குண்டுகளாலும் மேலும் சிலர் துப்பாக்கி குண்டுகளாலும் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.” என்று தெரிவித்தார்.

இந்த கொலைக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபற்றி அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியும், ஐ.நா.சபையின் சிறப்பு தூதருமான கிளிண்டன் கூறுகையில்,”பலியானவர்கள் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படுகொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

யார் காரணம்?

இந்த கொலை சம்பவத்துக்கு யார் காரணம் என்பது தெரியவில்லை. இதற்கு இலங்கை ராணுவமே காரணம் என்று விடுதலைப்புலிகள் ஆதரவு இணையதளம் குற்றம் சாட்டியுள்ளது. இந்த கொலைக்கு விடுதலைப்புலிகளே காரணம் என்று ராணுவம் குறை கூறியுள்ளது.

பிரேத பரிசோதனை

இந்தநிலையில், சுட்டுக் கொல்லப்பட்ட 17 பிரான்ஸ் நிறுவனத்தின் தமிழ் சமூக சேவகர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக திரிகோணமலை ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. அவர்களது உடல்களை அடையாளம் காட்ட வந்த உறவினர்கள் கதறி அழுதனர்.

பிரேத பரிசோதனை முடிந்த பிறகு அவர்களது உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். இறுதிச்சடங்குகள் எப்போது நடைபெறும் என்பது தெளிவாக தெரியவில்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

action_fiam.jpgaction_fiam.1jpg.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கடைசி டெஸ்ட் கிரிக்கெட்: ஜெயவர்த்தனேயின் சதத்தால் இலங்கை மீண்டும் வெற்றி
Next post வவூனியா கண்ணிவெடித்தாக்குதலில் மருத்துவர் உள்ளிட்ட 5 பேர் பலி