தல 57-ல் இணைந்த பிரபல காமெடி நடிகர்…!!

Read Time:2 Minute, 24 Second

201609201724254424_comedy-actor-joint-thala-57-movie_secvpfஅஜித் நடிப்பில் உருவாகிவரும் ‘தல 57’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு படக்குழுவினர் தயாராகி வருகின்றனர். இப்படத்தில் காஜல் அகர்வால், அக்ஷராஹாசன், அப்புக்குட்டி உள்ளிட்டோர் நடிப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், இப்படத்தில் காமெடி நடிகர் கருணாகரன் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்தது. ஆனால், இதுவரையிலும் அவர் அந்த படத்தில் நடிப்பாரா? என்பது உறுதி செய்யப்படாமலேயே இருந்தது. இந்நிலையில், தற்போது அஜித் படத்தில் கருணாகரன் நடிப்பது உறுதியாகியுள்ளது.

இதை கருணாகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிபட கூறியுள்ளார். தலக்கும் தல ரசிகர்களுக்கும் இதன் மூலம் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், இயக்குனர் சிவா- சத்யஜோதி பிலிம்ஸ் கூட்டணியில் தல நடிக்கும் படத்தில் நானும் இணைவது மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறியுள்ளார்.

அஜித்-சிவா கூட்டணியில் உருவான ஒவ்வொரு படத்தில் மாறி மாறி காமெடி நடிகர்கள் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ‘வீரம்’ படத்தில் சந்தானம் காமெடியனாக நடித்திருந்தார். ‘வேதாளம்’ படத்தில் சூரி காமெடியனாக நடித்திருந்தார். தற்போது ‘தல 57’ படத்தில் கருணாகரன் காமெடியான நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வடக்கு மக்களிற்காக பொலிஸ் அவசரசேவை…!!
Next post உங்கள் முக அமைப்புக்கு பொருத்தமான ஹேர்ஸ்டைல்கள் எது…!!