By 21 September 2016 0 Comments

விஷ்ணு விஷாலுடன் மீண்டும் இணையும் ஷான் ரோல்டன் – சூரி…!!

201609211451432887_sean-roldan-soori-again-joint-with-vishnu-vishal_secvpfசிறு பட்ஜெட் படங்களில் நாயகனாக நடித்து தொடர்ந்து வெற்றி பெற்று வந்த நடிகர் விஷ்ணு விஷால், சமீபத்தில் தயாரிப்பாளராக மாறினார். இவருடைய தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாக எழில் இயக்கத்தில் இவர் நடித்த ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படம் வெற்றிப்படமாக அமைந்தது.

இதையடுத்து, தனது தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் இரண்டாவது படத்தையும் தயாரிக்க தொடங்கிவிட்டார். இந்த முறை புதுமுக இயக்குனர் முருகானந்ததுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார் விஷ்ணு விஷால். இதில் நாயகனாக விஷ்ணு விஷாலே நடிக்கவுள்ளார். கதாநாயகியாக கேத்ரீனா தெரசா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் சென்னையில் எளிமையாக நடந்தது.

இந்நிலையில், தற்போது இப்படத்தின் இசையமைப்பாளராக ஷான் ரோல்டன் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் விஷ்ணு விஷால் நடித்திருந்த ‘முண்டாசுப்பட்டி’ படம் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். மேலும், காமெடி வேடத்தில் சூரி ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகையர் விவரங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.



Post a Comment

Protected by WP Anti Spam