தவறு செய்யும் மாணவர்களுக்கு விநோத தண்டனை வழங்கும் பாடசாலை…!!

Read Time:2 Minute, 33 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90பாடசாலைகளில் சிறிய தவறுகளை செய்யும் மாணவர்களுக்கு விநோத தண்டனை வழங்கும் பாடசாலை ஒன்று தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளன.

மாவனெல்ல பகுதியிலேயே இந்த விநோத தண்டனை வழங்கும் பாடசாலை காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கமைய மாணவர்கள் கழுத்தில் காட்ர்போட் மட்டை ஒன்று தொங்கவிடப்பட்டுள்ளதாகவும், குறித்த காட்ர்போட் மட்டைகளில் 100 கட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், இது ஒவ்வொரு மாணவரின் கழுத்திலும் தொங்கவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் செய்யும் தவறுகள் ஒவ்வொன்றின் போதும் குறித்த மட்டையில் உள்ள ஒவ்வொரு கட்டங்களும் புள்ளடியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தண்டனையால் மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பெற்றோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முதலாம் தரம் மற்றும் இரண்டாம் தர மாணவர்களுக்கே இந்த தண்டனை வழங்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் மாணவர்களின் ஒழுக்கத்தை பேணும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பொல்கொல்லயில் இடம்பெற்ற ஆசிரியர் பயிற்சியின் போது தமக்கு இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு பயற்சிகள் வழங்கப்பட்டதாக குறித்த பாடசாலையின் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நலம் வாழ வெள்ளை உணவுகள்…!!
Next post கொழும்பிலிருந்து வருகைதந்த பொலிசாரால் கிளிநொச்சி பொதுச் சந்தையில் பகுப்பாய்வு…!!