தனது மகளின் முதல்மாத பிறந்த நாளை ஆளில்லா விமானங்களை பறக்க விட்டு கொண்டாடிய சீனத் தந்தை…!!

Read Time:2 Minute, 59 Second

201609221038574338_chinese-dad-celebrates-daughter-first-month-with-a-flock-of_secvpfதனது மகளின் முதல்மாத பிறந்த நாளை ஆளில்லா விமானங்களை பறக்கவிட்டு கோலாகலமாக கொண்டியுள்ளார் சீன தந்தை.

சீனாவின் ஹூனான் மாகாணத்தைச் சேர்ந்தவர் யாயுன். இவருக்கு கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்ததுள்ளது. கடந்த 19-ந்தேதி அந்த குழந்தைக்கு 1 மாதம் முடிவடைகிறது.

பணக்கார தந்தையான இவர், தனது மகளின் முதல்மாத பிறந்த நாளை மறக்க முடியாத அளவிற்கு கொண்டாட வேண்டும். மேலும், தனது மகள் பெரியவளாகும்போது தன்னுடடைய பிறந்த நாளை தந்தை எவ்வளவு சிறப்பாக கொண்டாடியுள்ளார் என்பதை இந்த படங்களைப் பார்த்து பூரிப்பு அடைய வேண்டும் என்று நினைத்தார்.

இதனால் பிறந்த நாளிற்கு அழைத்திருந்த உறவினர் மற்றும் நண்பர்களுக்கு ட்ரோன் (ஆளில்லா விமானம்) வாங்கி கொடுக்க முடிவு செய்தார். அதன்படி பிறந்த நாளிற்கு வந்த அனைவருக்கும் ட்ரோன் வாங்கி கொடுத்தார்.

அவர்கள் குழந்தைகைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிவிட்டு, டிட்ரோனை பறக்கவிட்டனர். இதனால் பிறந்த நாள் கொண்டாடப்பட்ட இடத்திற்கு மேல் பட்டாம்பூச்சி பறப்பதுபோல், ட்ரோன்களாக பறந்து அமர்க்களப்படுத்தின.

இதுகுறித்து ட்விட்டரில் சிலர் கருத்துக்கள் கூறினார்கள். அப்போது, சீன பணக்காரர் ஒருவர் தனது நாய்க்கு 8 ஐ-போன் வாங்கிக் கொடுத்துள்ளார். தற்போது ஒருவர் தனது மகளின் முதல் மாத பிறந்த நாளைக்காக ட்ரோன்களாக பறக்க விடுகிறார். அவர்களது அருகில் நடுத்தர வர்க்க மக்களும் வாழ்ந்து வரும்போது இது தேவைதானா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.

இந்த பிறந்த நாள் விழாவில் பறந்த ஒரு ட்ரோனின் விலை சுமார் 1800 டாலர் இருக்கும் என்று கருதப்படுகிறது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அதிபரின் தாக்குதலுக்குள்ளான மாணவன் வைத்தியசாலையில்…!!
Next post மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக கல்லூரி பேராசிரியருக்கு 10 ஆண்டு ஜெயில்: ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு…!!