அதிகாலை உறவு நன்மையா? ஆய்வு என்ன சொல்கிறது தெரியுமா?

Read Time:6 Minute, 6 Second

couple_bedroom_001-w245கணவன் மனைவி இருவரும் எவ்வளவு நெருக்கமான உடலுறவு கொள்கிறார்களோ அந்த அளவிற்கு அவர்களின் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பது ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதிகாலையில் உடலுறவு கொள்வதால், உங்கள் வாழ்க்கை சிறப்பாகவும், உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பலவகையான நன்மைகளும் கிடைக்கின்றது.

ஏனெனில் காலையில் உடலுறவு கொள்ளும் தம்பதிகளின் உடம்பில் இருந்து ஆக்ஸிடாஸின் எனப்படும் ஹார்மோன் வெளியிடப்படுகிறது.

இதனால் அவர்களுக்கு கிடைக்கும் நன்மைகளோ ஏராளம்!

* அதிகாலை உடலுறவில் ஈடுபடும் நேரத்தில், தம்பதிகள் உச்சக்கட்ட இன்பத்தை அடைகிறார்கள். அப்போது அவர்களின் உடம்பில் இருந்து வெளியிடப்படும் ஆக்ஸிடாஸின் என்னும் ஹார்மோன், அவர்களுக்கு இரவில் நிம்மதியான உறக்கத்தை தருகின்றது.

* அதிகாலையில் உடலுறவு கொள்வதால், உடலில் ஒருசில நல்ல ஹார்மோன்களுடன், ஒருசில சேர்மங்களும் சேர்ந்து வெளியிடப்படும். இந்த ஹார்மோன்கள் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கிறது.

* அன்றாடம் நம் வாழ்க்கையில் தினமும் அதிகாலை உடலுறவில் ஈடுபடுவதன் மூலம், ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் சீராக்கப்பட்டு, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளகிறது.

* பெண்கள் மாதவிடாய் நெருங்கும், ஒரு வாரத்திற்கு முன் உடலுறவில் ஈடுபட்டால், அப்போது சுரக்கும் ஹார்மோன் அளவானது மாதவிடாயின் போது ஏற்படும் ஹார்மோன் அளவை சீராக்குகின்றது.

* தினமும் அதிகாலையில் உடலுறவு கொண்டால், பெண்களுக்கு வயிற்றுப் பிடிப்பு சதைகள் குறைந்து, மாதவிடாய் காலத்தில் தோன்றும் வயிற்று வலி ஏற்படாமல் இருக்கும்.

* உடலுறவு கொள்வதன் மூலம், ஆக்ஸிடாஸின்கள் என்னும் ஹார்மோன் கீழ்முதுகில் ஏற்படும் வலியை குணப்படுத்துகிறது.

* வாரம் இரண்டு முறைகளுக்கு மேல் அதிகாலையில் உடலுறவு கொண்டு வந்தால், ஆண்களுக்கு பக்கவாதம் வரும் வாய்ப்பானது மிக குறைவாக உள்ளது.

* அதிகாலை உடலுறவு கொள்வதால், நல்ல நிம்மதியான தூக்கத்தை பெறமுடிகிறது. இதனால் முகமானது பொலிவோடு பிரகாசமாக இருப்பதுடன், ஆண், பெண் இருவருக்கும் முதுமை தோற்றம் வராமல் தடுக்கப்படுகிறது.

* அன்றாடம் அதிகாலை 30 நிமிடம் செய்யும் உடலுறவானது, 30 நிமிடம் உடற்பயிற்சி செய்ததற்கு சமமாகும். இதனால் உடல் நன்கு ஆரோக்கியமாகவும், பிட்டாகவும் இருக்கும்.

* ஆண்கள் அன்றாடம் காலையில் உடலுறவில் ஈடுபடும் போது, விந்தணுவானது சீராக வெளியேற்றப்படுவதால், புரோஸ்டேட் சுரப்பியில் விந்தணு தேங்குவது தடுக்கப்படுகிறது. இதனால் புரோஸ்டேட் எனப்படும் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

* அதிகாலை செய்யும் உடலுறவு, நாம் செய்யும் உடற்பயிற்சிக்கு சமமாக இருப்பதால், அந்த பயிற்சியானது நம் உடம்பில் உள்ள நோயெதிர்ப்பு மண்டலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் நாம் பல நோய்களின் தாக்கத்திலிருந்து விடபட முடிகிறது.

* அதிகாலை உடலுறவின் போது ஆண் மற்றும் பெண்களின் உடலில் இயற்கையாக எண்டோர்பின் என்னும் ஹார்மோனானது சுரக்கப்படும். இது வலி நிவாரணியான பயன்படுகிறது.

* உடலுறவின் போது, டோபமைன் என்னும் ஹார்மோன் உற்பத்தி செய்யப்படுகிறது. இது ஆண் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை எதிர்த்துப் போராடி, மன அழுத்தத்தை குறைக்கிறது.

* அதிகாலை செய்யும் உடலுறவின் போது, நமது உடம்பில் உற்பத்தி செய்யப்படும் சேர்மங்களால், தலைவலி மற்றும் காய்ச்சல் போன்ற நோய்கள் வராமல் தடுகிறது. இதனால் மனமானது அதிக புத்துணர்ச்சி பெற்று மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

*** இதுபோன்ற “அவ்வப்போது கிளாமர்” செய்திகளை பார்வையிட இங்கே அழுத்தவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 80 வயது முதிர்ச்சியான தோற்றத்துடன் பிறந்த குழந்தை…!!
Next post லசந்தவின் சடலம் தோண்டப்படுகின்றது…!!