பிரபாகரனின் அடையாள அட்டையை வைத்திருந்ததால், சிக்கலில் மாட்டிய கமால் குணரத்ன!!: ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க கோருகிறார் சரத்!! (VIDEO)

Read Time:2 Minute, 57 Second

1-copy-01ab

பிரபாகரனின் அடையாள அட்டையை வைத்திருந்ததால், சிக்கலில் மாட்டிய கமால் குணரத்ன!!: ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க கோருகிறார் சரத் !!

இராணுவத் தளபதியாக இருந்த தனது உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறிய, அண்மையில் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளார் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

லங்காதீப வார இதழுக்கு அளித்துள்ள செவ்வியில் அவர், 2009 ஆம் ஆண்டு பிரபாகரன் கொல்லப்பட்ட பின்னர், அவரது அடையாள அட்டையையும், அடையாளத் தகட்டையும், கொழும்புக்கு அனுப்புமாறு நான் மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவுக்கு உத்தரவிட்டேன்.

எனினும், அவை கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டதா? என்பதை என்னால் அறிய முடியவில்லை.

பிரபாகரனின் அடையாள அட்டையை மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவே வைத்திருக்கிறார் என்பதை அவர் ஊடகங்களுக்குத் தெரியப்படுத்திய பின்னர் தான் எனக்குத் தெரியும்.

அதனை இராணுவ அருங்காட்சியகத்துக்கு வழங்கப் போவதாக அவர் கூறியிருக்கிறார்.

பிரபாகரனின் அடையாள அட்டையை, கொழும்புக்கு அனுப்புமாறு நான் உத்தரவிட்ட பின்னரும், அதனை அவர் எவ்வாறு வைத்திருக்க முடியும்?

இந்த ஒழுக்கமீறலுக்கு எதிராக, மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு தற்போதைய இராணுவத் தளபதியிடம் கோரவுள்ளேன்.

நந்திக்கடலுக்கான பாதை நூலில், “பிரபாகரனின் உடலை ஒரு குழந்தையாலும் அடையாளம் காண முடியும்”, என்று மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன குறிப்பிட்டிருந்தார்.

“ஆனால், அதனை ஆதாரத்துடன் செய்ய வேண்டியிருந்தது. இராணுவத்தில் இருந்த எவருமே பிரபாகரனை நேரில் கண்டதில்லை.

அதனால் தான் பிரபாகரனின் உடலை அடையாளம் காண கருணாவை அனுப்பி வைத்தேன்.

அதுமாத்திரமன்றி, பிரபாகரனின் உடல் மரபணுப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.” என்றும் அவர் கூறியுள்ளார்.

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிகர் திலகத்தின் பாடலை ரீமிக்ஸ் செய்யும் ஜி.வி.பிரகாஷ்…!!
Next post தெள்ளு பூச்சி கடியால் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு காய்ச்சல்…!!